tamilnadu

img

தொழிலாளர்கள் தேசத்தைக் காத்து நிற்பார்கள்... சிஐடியு அகில இந்தியப் பொதுக்குழுவில் முழக்கம்

ஹசன்:
மத்திய பாஜக அரசிடமிருந்து, இந்திய நாட்டையும், மக்களையும் தொழிலாளர் வர்க்கம் காத்து நிற்கும் என்று, இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) அகில இந்திய பொதுக்குழு உரத்துக் குரல் எழுப்பியுள்ளது.கர்நாடக மாநிலம், ஹசனில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில், 22 மாநிலங்களிலிருந்து 44 பெண் நிர்வாகிகள் உட்பட 355 பேர் பங்கேற்றனர். அகிலஇந்தியத் தலைவர் ஹேமலதா கொடியேற்றினார். விஜய குமார் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் மற்றும் செயலாளர் ஏ.ஆர். சிந்து ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். அந்த தீர்மானங்களில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகஅரசாங்கம் பின்பற்றும் நவீன தாராளமயக்கொள்கைகளுக்கு எதிராக- மதவெறி பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக, தொழிலாளர்களை ஒடுக்குகிற மற்றும் அதன் எதேச்சதிகார- ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக- சுயேச்சையாகவும், பிற அமைப்புகளுடன் கூட்டாகவும் இணைந்து இயக்கங்களைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று சிஐடியு ஏற்கெனவே அறைகூவல் விடுத்திருக்கிறது.இதனடிப்படையில், ‘வர்த்தகம் செய் வதை எளிமைப்படுத்துவது’ என்ற பெயரில், தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றவும், அந்நிய முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்தல் போன்ற “சீர்திருத்தங்களிலும்” மோடி அரசாங்கம் இறங்கியிருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்களை அணிதிரட்ட சிஐடியு தீர்மானிக்கிறது.

பொதுத்துறையைக் கைகழுவுவதுடன், அந்நியக் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகநம் நாட்டின் உற்பத்திப் பிரிவுகளை அழிக்கும் வகையில், ராணுவ உற்பத்திப் பிரிவுகளையும் கூட, கார்ப்பரேட் மயமாக்கிட ‘மோடி-2’ அரசாங்கம் முடிவுஎடுத்துள்ளது. இதற்கு எதிராக ஆகஸ்ட்20-இல் இருந்து 30 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட பாதுகாப்புத்துறை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். அதேபோல, உருக்கு, ரயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட இதர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏற்கெனவே தனியார்மயத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த போராட்டங்கள் அனைத்தையும் வரவேற்பதுடன், அவற்றுக்கு ஆதரவாக நிற்பதென சிஐடியு முடிவு செய்துள்ளது.ரயில்வேயில் இயங்கிவரும் உற்பத்திப் பிரிவுகளைக் கார்ப்பரேட் மயமாக்கிடவும், பெரிய மார்க்கங்களில் தனியார் ரயில்களைஅறிமுகப்படுத்துவதற்கும் ‘100 நாள் திட்டம்’வகுத்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக ரயில்வே ஊழியர் சங்கங்கள் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் அணிதிரண்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே தனியார்மயத்திற்கு எதிராக சிறப்புமாநாடுகள் நடத்திடவும், தொழிலாளர் களை போராட்டத்திற்கு தயார்ப்படுத்துவதுடன், தனியார்மய அபாயத்தை விளக்கி,ரயில் நிலையங்களின் முன்பு ஆர்ப்பாட் டங்கள் நடத்தவும் சிஐடியு பொதுக்குழு தீர்மானிக்கிறது.2019 செப்டம்பர் 5 அன்று அகில இந்தியவிவசாய சங்கத்தால் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பதுடன்; தொழிலாளர் - விவசாயிகளின் கூட்டு ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களை பெருமளவில் திரட்ட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறது.இவ்வாறு சிஐடியு பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னையில் அகில இந்திய மாநாடு
முன்னதாக, 2020 ஜனவரி 23-27 தேதிகளில் சென்னையில் சிஐடியு-வின் 16-ஆவது அகில இந்திய மாநாட்டை நடத்துவதற்காக தபன்சென் சமர்ப்பித்த முன் மொழிவும் பொதுக்குழுவில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு ‘முகமது அமின் நகர்’ என பெயரிடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை மற்றும் பிரதிநிதிகள் அமரும் அரங்கிற்கு ‘சுகுமால்சென் அரங்கம்’ எனப் பெயரிடப்பட் டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, 1923 மே 1 அன்று இந்தியாவின் முதல் ‘மே தின’த்தைக் கொண்டாடிய சிங்காரவேலர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விவாதங்கள் மொழி பெயர்ப்பு
பொதுக்குழுக் கூட்டத்தில் முதன்முறையாக விவாதங்கள் அனைத்தும் வங்கமொழி, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரேசமயத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டன.
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சிஐடியுவின் அகில இந்திய பொதுக் குழுக் கூட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. பணியிடங்களில் பாலியல் தொல்லைகொடுத்தல் தடைச் சட்டம் மீது அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து சிறப்பு மாநாடு நடத்துவது, உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அம்சங்கள் குறித்து, அகில இந்திய அளவில் கருத்தரங்கம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப் பட்டன.மேலும், உழைக்கும் பெண்களின் பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு மாதங்கள் பிரச்சாரங்கள் மேற்கொண்டபின் 2020மார்ச் 8 அன்று நாடு முழுவதும் ‘சிறைநிரப்பும்’ போராட்டம் நடத்தவும் திட்டமிடப் பட்டது. இவை அனைத்திற்கும் சிஐடியு அகில இந்தியப் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

;