tamilnadu

img

பாஜக கூட்டணி 300 இடங்களைப் பெறுமா? கருத்துக் கணிப்பை நம்பாதீர்கள்

குண்டூர்:

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியே பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த கணிப்புக்களை நம்ப வேண்டாம் என்று பாஜகவின் தலைவர்களில் ஒருவரும், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது:

தேர்தலில் வெற்றிபெறுவோம் என்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் அதீத நம்பிக்கை இருக்கும். வாக்கு எண்ணிக்கைதொடங்கும் வரை ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தலாம். தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் எப்போதுமே துல்லியமாக இருப்பதில்லை.


அது சரியான கணிப்பும் அல்ல.கடந்த 1999 முதல் பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புக் களை தவறாகி இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இந்த எக்சிட்போலை நம்பாமல், எக்ஸாட் போலையே (உண்மையான வாக்கு பதிவு) நாம் நம்ப வேண்டும்.இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

;