tamilnadu

img

காஷ்மீர் குழந்தைகளுக்கு எப்போது நிம்மதி வாய்க்கும்?

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ததுடன், மாநில அந் துஸ்தை பறித்து, யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது.இதற்கு எதிராக போராட்டங்கள்வெடிக்கலாம் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி, அங்குள்ள மக்களை வீட்டுச்சிறை வைத்துள்ளது. தொலைத் தொடர்பு வசதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டன. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப் பட்டுள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதும் சிக்கலாகி உள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலை குறித்து, அமைதிக்கான ‘நோபல்’ விருது வென்ற மலாலாயூசுப் சாய் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அதில், “நான் குழந்தையாக இருந்தது முதல் காஷ்மீர் மக்கள்போர்ச் சூழலில்தான் வாழ்ந்து வருகின்றனர். எனது அப்பா, அம்மா குழந்தையாக இருந்தபோதும் அதுதான் நிலை. எனது தாத்தா, பாட்டிஇளமையாக இருந்த போதிலிருந்து இதுதான் நிலைமை. ஆனால், இன்று நான் அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி கவலைப் படுகிறேன். ஏனெனில் போர்ச் சூழலின் போது அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் தான். அதிகம் இழப்பதும் அவர்கள் தான்” என்று மலாலாகூறியுள்ளார்.மேலும், “நாம் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும், ஒருவருக்கொருவர் காயப்படுத்த தேவையில்லை” எனவும் பொதுவான வேண்டுகோள் ஒன்றை அவர் வைத்துள்ளார்.

;