tamilnadu

img

ஊரக வேலைத்திட்டத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது?

பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புள்ளிவிபரங்களுடன் பதில்

புதுதில்லி, பிப்,6- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் பல்வேறு கேள்விகள் எழுப்பினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் 2017-18, 2019-20 ம் ஆண்டுகளுக்கு  தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு விவரங்கள் மற்றும் இதுவரை இதற்கு பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு,  மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் வேலை பெற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வழங்கப்பட்ட மனித நாட்கள் விவரங்கள் மற்றும் இன்றைய தேதியின்படி உருவாக்கப்பட்ட சொத்துகளின் விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட காலகட்டத்தில்  ஊதியத்திற்காகவும், நிர்வாக வேலைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட நிதி விபரங்களை குறிப்பிடுமாறு அவர் கேட்டிருந்தார். இக்கேள்விகளுக்கு, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த பதிலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், நிர்வாக தகவல் முறையின் படி (MIS) மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பட்ஜெட் மதிப்பீடு, திருத்தப்பட்ட மதிப்பீடு, விடுவிக்கப்பட்ட நிதி மற்றும் அறிக்கையிடப்பட்ட செலவுகள் பற்றிய விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

2017-18 நிதியாண்டு

பட்ஜெட் மதிப்பீடு:  48000 கோடி
திருத்தப்பட்ட மதிப்பீடு - 55167.06 கோடி
விடுவிக்கப்பட்ட நிதி - 55706.07 கோடி  மாநில அரசு/யூனியன்களால் தெரிவிக்கப்பட்ட செலவினம் (மாநிலப் பங்கு உட்பட மொத்தம்) 63649.48 கோடி
2019-20  நிதி ஆண்டு : 30.01.2020 வரை
பட்ஜெட் மதிப்பீடு:  60000 கோடி
திருத்தப்பட்ட  மதிப்பீடு - 65995.03 கோடி
விடுவிக்கப்பட்ட நிதி - 60282.80 கோடி மாநில அரசு/யூனியன்களால் தெரிவிக்கப்பட்ட செலவினம் (மாநிலப் பங்கு உட்பட) 54075.30 கோடி இதில் நிதி ஆண்டு 2017-18ல் 55706.07 கோடி என்பது திருப்பி வரவு வைக்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட பரிவர்த்தனையான, ஊதிய செலவின வகையில் கழிக்கப்பட்ட ரூ.136890.498 லட்சம் உட்பட ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், 30.01.2020 தேதிப்படி, 2017-18, 2019-20  நிதி ஆண்டில் பணி செய்த மொத்த பணியாளர் மற்றும் பணி நாட்கள் விபரங்கள் பின்வருமாறு: 2017-18 ஆம் நிதி ஆண்டில் மொத்த பணி செய்தோர் எண்ணிக்கை: 7.59 கோடி, உருவாக்கப்பட்ட நபர் நாட்கள் : 233.74 கோடி. 2019-20 ஆம் நிதி ஆண்டு  மொத்த பணி செய்தோர் எண்ணிக்கை : 6.95 கோடி, உருவாக்கப்பட்ட நபர் நாட்கள் 207.88 கோடி. (30.01.2020ன் படி) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நிர்வாக தகவல் முறை (MIS) மூலம், 2017-18, 2019-20 (30.01.2020ன் படி) நிதி ஆண்டுகளுக்கான, முடிக்கப்பட்ட பணிகள்,  ஊதிய செலவினங்கள், நிர்வாக செலவினங்களாக மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களால் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு:

2017-18 ஆம் நிதி ஆண்டில் முடிக்கப்பட்ட பணிகள்

0.63 கோடி, ஊதிய  செலவினம் : 43128.49 கோடி,  நிர்வாக  செலவினம்: 2420.31 கோடி, 2019-20 ஆம் நிதி ஆண்டு  முடிக்கப்பட்ட பணிகள் 0.58 கோடி  ஊதிய செலவினம்: 38995.06 கோடி நிர்வாக செலவினம்: 2302.04 கோடி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் என்பது ஒரு தேவையால் செலுத்தப்பட்ட ஊதிய வேலைவாய்ப்பு திட்டமாகும். மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு, நிதியை விடுவித்து வழங்குதல் ஒரு தொடர்ச்சியான, மாறுகின்ற தன்மை கொண்ட முறையாகும்.

இந்த நிதியை உருவாக்கி வழங்குவதற்குண்டான செயலில், பணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பொறுப்பேற்கிறது. இந்த நிதியை மத்திய அரசு, கால முறையில், மாநிலங்களுக்கு இரண்டு பகுதிகளாக, ஒவ்வொரு பகுதியும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் உள்ளபடி அளிக்கிறது. இந்த அளிப்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட தொழிலாளர் பட்ஜெட் (நபர் நாட்கள்), ஆரம்ப இருப்பு, நிதி உபயோகப்படும் வேகம், முந்தைய ஆண்டு நிலுவையில் ஏதேனும் கடன்கள் இருப்பின் அது, மற்றும் ஒட்டு மொத்த செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதி ஆண்டான 2019-20 ல், (30.01.2020 ன் படி) அமைச்சகம்,  ரூ.60282.80 கோடி நிதியை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்காக விடுவித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
 



 

;