tamilnadu

img

பிளவுவாத குடியுரிமை சட்டத்தை முற்றிலும் நிராகரிக்கிறோம்... பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் அறிக்கை

புதுதில்லி:
மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாகிஸ்தானில் வசிக்கும்  இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.“பாகிஸ்தானிய இந்துக்கள் ஒருமித்த கருத்துடன் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நிராகரிக்கிறோம். இது சமூகப் பாகுபாடுகளால் இந்தியாவை பிரிவினையை நோக்கி இட்டுச்செல்லும்” என்று அந்நாட்டின் இந்து கவுன்சில் தலைவர் ராஜா அசார் மங்கலானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “உண்மையான எந்தவொரு ‘இந்து’வும், இந்த சட்டத்தைஆதரிக்க மாட்டான். பாகிஸ்தானின்ஒட்டுமொத்த இந்து சமூகத்திலிருந்தும் இந்திய பிரதமருக்கு ஒருமனதாக சொல்லப்படும் செய்தி இதுதான்” என்று ராஜா அசார் மங்கலானிகூறியுள்ளார்.அதேபோல், பாகிஸ்தானில் வாழும் சீக்கியர்களும் சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். “பாகிஸ்தான் சீக்கியர்கள் மட்டுமல்ல, இந்தியா உட்படஉலகிலுள்ள ஒட்டுமொத்த சீக்கியசமூகத்தினரும் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம்” என்று பாபாகுருனாநக் குருத்வாராவின் தலைவர் கோபால் சிங் தெரிவித்துள்ளார்.“இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலுமே சீக்கியர்கள் சிறுபான்மையினர்தான். அவர்களில் ஒருவன் என்ற வகையில், இந்தியாவின் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வலியையும், அச்சத்தையும் என்னால்  உணர முடியும். இது துன்புறுத்தக் கூடிய விஷயமாகும்” என்று கூறியுள்ள கோபால்சிங், “மோடி அரசு சிறுபான்மையினர் மீது வெளிவர முடியாத கடினமான அழுத்தத்தை திணிக்க வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமித்ஷா சொன்னது சரிதானா?
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “1947-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது 3.7 சதவிகிதமாக குறைந்து விட்டது” என்று கூறியிருந்தார்.ஆனால், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்காளதேசம்) பிரிந்துவிட்ட பிறகு, மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) சிறுபான்மையினரின் மக்கள் தொகைஎப்போதுமே 23 சதவிகிதமாக இருந்ததில்லை என்று புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானின் 1961ஆம் ஆண்டுமக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, இஸ்லாமியர்கள் அல்லாதசிறுபான்மையினரின் மக்கள் தொகை2.83 சதவிகிதமாக இருந்தது. 1972ஆம்ஆண்டு அது 3.25 சதவிகிதமானது. இதுவே 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 3.30 சதவிகிதமாகவும், 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3.70 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

;