tamilnadu

img

தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ரூ.2780 கோடி முதலீடாம்

 முதலமைச்சர்  முன்னிலையில்  ஒப்பந்தம்  கையெழுத்து

சென்னை, செப். 4- தமிழகத்தில் ரூ. 2780 கோடி முதலீடு செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமெ ரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. தமிழகத்துக்கு தொழில் முத லீடுகளை ஈர்க்க வெளிநாடு களுக்கு சென்றுள்ள முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி. நியூ யார்க்கில் தொழில் முதலீட்டா ளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் முதல மைச்சர் பேசுகையில் தமிழ கத்தில் சாலை வசதி, குடிநீர், மின் சாரம், துறைமுகம், விமான நிலை யம் ஒருங்கே அமைந்துள்ளதால் தொழில் தொடங்க உகந்த மாநில மாக தமிழகம் திகழ்ந்து வரு கிறது. உங்களுக்கு தேவையான  அனைத்து கட்டமைப்பு வசதி களையும் அரசு செய்து தரும்.மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலம் தமிழகம். தடை யற்ற மின்சாரம், சிறந்த உள்  கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க  மனித வளம் தமிழகத்தில் உள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில் கள் கால்நடை மற்றும் பால் வளம், ஆட்டோ மொபைல், எரி சக்தி போன்றவைகளுக்கு அரசு  தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது.எனவே தமிழகத்துக்கு வந்து தொழில் தொடங்குங்கள். உங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களான கேட்டர்பில்லர், போர்டு போன்ற  நிறுவனங்களின் உயர் அலுவலர்  கள் தமிழ் நாட்டில் தங்களுக்கு  ஏற்பட்டுள்ள நல் அனுபவங்க ளை முதலமைச்சருடன் பகிர்ந்து  கொண்டனர். அவர்களுடன் கலந்துரை யாடிய முதல்வர், தடையற்ற மின்சாரம், சிறந்த உள் கட்ட மைப்பு வசதிகள், திறன்மிக்க மனித வளம் தமிழ்நாட்டில் உள் ளது என்பதை எடுத்துக்கூறி, அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முத லீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் இறுதி யில் ஜீன் மார்டின், ஆக்கியுள் சிஸ்டர், டைசஸ் பார்மா, நுராய்  கெமிக்கல்ஸ், நோவிடிம் லேப், ஜோகோ ஹெல்த், எஸ்.டி. எல்.என்.ஜி., சராம்-4, எமர்சன், அஸ்பயர் கன்சல்டிங், ரெவச்  சூர்-எல்.எல்.சி., ஹில்லைன் டெக்னாலஜி உள்ளிட்ட 16 நிறு வனங்கள் ரூபாய் 2,780 கோடி முதலீடு செய்து, தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதைத் தவிர, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவ னம், நாப்தாகிரார்கர் யூனிட்டு டன் கூடிய உற்பத்தி தொழிற் சாலையை முதற்கட்டமாக சுமார் 50,000 கோடி ரூபாய் அள வில் அமைக்க விருப்பம் தெரி வித்து, கொள்கை அளவிலான  ஒரு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டது.