tamilnadu

img

கடவுள் சிலைகளுக்கும் சுவாசக் கவசம் அணிவிப்பு... வாரணாசி அர்ச்சகருக்கு முற்றிப் போன ‘பக்தி’

வாரணாசி:
நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து மக்கள் அனைவரும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், வாரணாசி கோவிலில் அர்ச்சகராக இருக்கும் கிருஷ்ண ஆனந்த் பாண்டே என்பவர், ஒருபடிமேலே சென்று, கடவுள் சிலைகளுக் கும் சுவாசக் கவசம் அணிவித்து, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண் டுள்ளார்.இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, “நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

“குளிர்காலங்களில் சிலைகளுக்கு ஸ்வெட்டர் அணிவிப்பதும்,  வெயில்காலங்களில் ஏசி அல்லது மின்விசிறிபோடுவதும் வாரணாசியில் நடைமுறையில் உள்ளது. அதன்படியே, தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளது” என்றுமேலும் கூறியிருக்கும் கிருஷ்ண ஆனந்த் பாண்டே, “கொரோனா ஆபத்து நீங்கும் வரை, பொதுமக்கள் சாமி சிலைகளைத் தொட வேண்டாம்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதன்காரணமாக வாரணாசி கோயிலில், பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் முகக்கவசம் அணிந்தபடியே, தற்போது சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

;