tamilnadu

img

டிக்-டாக் செயலிக்கு தடை இல்லை 

புதுதில்லி:
மத்திய அரசிடம் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சர் கி‌ஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.‘டிக்-டாக்’ செயலியை உலகம் முழுவதும் பெரும்பா லானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக  தகவல்கள்வந்த வண்ணம் உள்ளன. கலாச்சார சீரழிவுக்கு காரணமாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே, ‘டிக்-டாக்’ செயலிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்து கின்றனர்.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் சுபாஷ் சர்க்கார் கேள்வி எழுப்பினார். அதில்‘டிக்-டாக்’ செயலி தொடர்பாக அமெரிக்க உளவு நிறுவனத்திடம் இருந்துதகவல் ஒன்று வந்திருப்ப தாகவும், அதில், ‘டிக்-டாக்’ செயலியால் மக்களிடம் எதிர்மறை விளைவுகள் உரு வாகுவதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படு கிறது. எனவே, ‘டிக்-டாக்’செயலிக்கு தடை விதிக்கப் படுமா? என்று கேட்டார்.இதற்கு மத்திய அமைச்சர் கி‌ஷன் ரெட்டி பதிலளிக்கையில், அமெரிக்கா வில் இருந்து இதுபோன்ற எந்த அறிக்கையும் வரவில்லை. தற்போதைய நிலையில் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லைஎன்று அவர் கூறினார்.'

;