tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 100 சதவீத அபராதத் தொகையுடன் மாநில சாலை வரி செலுத்த வற்புறுத்துவதால் லாரி  உரிமையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

♦♦♦

ஜேஇஇ முதல் நிலைத்தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையும்  நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து நீட்,ஜேஇஇ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற் கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

♦♦♦

ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுவதாக தெலுங்கானா மாநி லத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

♦♦♦

ஜூம் செயலிக்கு பதிலாக ரிலை யன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ மீட்’  என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

♦♦♦

வங்கதேசத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்ததால் இருநாட்டுக்கும் இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

♦♦♦

பிஎஸ்என்எல் நிறுவனம் தொட ர்ந்து தனியார் டெலிகாம்  நிறு வனங்களுக்கு சவால் விடுக்கும் வகை யில் ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ பிளா னாக ரூ.599 பிளானில் நாள் ஒன்று க்கு 5 ஜிபி டேட்டாவுடன் 90 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளது.

♦♦♦

நாடு முழுவதும் இன்று முதல் ( ஜூலை 6) நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்படுகின்றன.