tamilnadu

img

பாத்திமாவின் செல்போனில் பதிவான தற்கொலை குறிப்புகள் போலி அல்ல...

சென்னை:
தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த தற்கொலை தொடர்பான குறிப்புகள், போலியானவை அல்ல என்று தடயவியல் துறையின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார், கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு எடுத்துவந்தனர். ஆய்வாளரின் அறையில் சார்ஜ் போடப்பட்டிருந்தபோது, அங்கு சென்றிருந்த பாத்திமாவின் உறவினர் ஒருவர், செல்போனில் இருந்த சில குறிப்புகளை மற்றொரு செல்போனில் படம்பிடித்ததாக கூறப்படுகிறது. அந்த குறிப்புகளை ஆதாரமாகக்கொண்டே, ஐஐடிபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, இந்த ஆதாரத்தின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வகையில், சென்னை தடயவியல் துறை கடந்த வாரம் ஆய்வு செய்து அதன் முதற்கட்ட அறிக்கை செவ்வாயன்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், மாணவியின் செல்போன் பதிவுகள் போலியானவை அல்ல. இவை தற்கொலைக்கு முன்பு எழுதியவையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

;