புதுதில்லி:
புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் வெள்ளியன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.கடற்படை தளபதியாக இருந்த சுனில் லம்பா ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய கடற்படைக்கு புதிய தளபதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட கரம்பீர் சிங் புதுதில்லியில் வெள்ளியன்று நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது தளபதி கூறுகையில், எனது முன்னோர்கள் இந்திய கடற்படைக்கு திடமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். புதிய உயரங்களை எட்டியுள்ளனர். அவர்களது வழியில் எந்த சவால்களையும் சந்திக்கும் விதமாக கடற்படையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்படுவேன் என்று தெரிவித்தார்.