tamilnadu

img

அக்டோபர் 10-16 நாடு தழுவிய கிளர்ச்சி

அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடிக்கு மோடி அரசே காரணம்

இடதுசாரிக் கட்சிகள் சிறப்பு மாநாடு அறைகூவல்

புதுதில்லி, செப்.20- ஆழமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மக்களின் துன்ப துயரங்கள் இவற்றைப்பற்றிக் கவலைப்படாத ஆட்சியாளர்களுக்கு எதிராக வரும் அக்டோபர் 10-16 தேதிகளுக்கு இடையே கிளர்ச்சி இயக்கங்களை நடத்துமாறு இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. தலைநகர் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை யன்று இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: இந்தியப் பொருளாதாரம் பொருளாதார மந்தத்தினை (recession) நெருங்கும் வகையில் மிகவும்  ஆழமான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. அரசாங்கத்தால் மிகவும் திரித்து  வெளியிடப்பட்டுள்ள தரவுகளேகூட, நாட்டின் அனைத்துத்துறைகளிலும் உற்பத்திக் குறைந்திருப்பதையும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலை இழப்புகள் ஏற்பட்டிருப்பதையும், உறுதி செய்துள்ளன. இவற்றில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது பெண்களாகும். ஆட்டோமோபைல் விற்பனை, ஜவுளி விற்பனை முதலானவற்றிலிருந்து பிஸ்கட் விற்பனை வரையிலும் விற்பனைகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றன என்பதை இச்சிறப்பு மாநாடு சுட்டிக்காட்டுகிறது. இந்நிலைமைகளை முன்பு மறுத்து வந்த மோடி அரசாங்கம் இப்போது பொருளாதார மந்தம் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளத்தொடங்கி இருக்கிறது. எனினும், தன் அரசாங்கம் பின்பற்றிய பணமதிப் பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற கொள்கைகளே நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் நாசத்தை விளைவித்தது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அதிகரித்துவரும்  வேலையில்லாத் திண்டாட்டம்,  தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமை, சொற்ப ஊதியம், ஆழமாகிக் கொண்டிருக்கும் விவசாய நெருக்கடி ஆகிய எதைப்பற்றியும் மோடி அரசாங்கம் கவலைப்படவில்லை. இதன்விளைவாக உழைக்கும் மக்களில் பெரும்பாலோரின் துன்ப துயரங்கள் அதிகரித்திருக்கின்றன. இவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக மோடி அரசாங்கம், மக்களின் கவனத்தை மதவெறி நடவடிக்கைகள் மூலமாக திசைதிருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

எந்தத்துறையிலாவது ஏதேனும் வளர்ச்சி ஏற்படுமாயின் அதன் பலன்களை நாட்டிலு ள்ள பெரும் பணக்காரர்கள் எடுத்துச்செல்ல மோடி அரசாங்கத்தின் கூட்டுக் கனவு முத லாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கொள்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது  மோடி அரசாங்கம் பெரும் பணக் காரர்களுக்கு விதித்திருந்த சர்சார்ஜ் வரிகளை எல்லாம் ரத்து செய்து அறிவித்திருக்கிறது. இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் அதி கரித்து வரும் ஏற்றத்தாழ்வு நிலைமை, இந்தியா வை உலகில் உள்ள மிகவும் ஏற்றத்தாழ்வு உள்ள நாடுகளில் ஒன்றாக மாற்றி இருக்கிறது. இவை, நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தவிர்க்கமுடியாத விளைவுகளாகும். இதனை இச்சிறப்பு மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. பெரும்பான்மை மக்களின் மத்தியில் வாங்கும் சக்தி, குறைந்திருப்பதன் காரணமாக உள்நாட்டுத் தேவை மிகவும் கடுமையாகக் குறைந்து நாட்டின் பொருளாதாரம் சிக்கித் தவிக்கிறது என்பது தெளிவாகும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமல், உள்நாட்டுத் தேவையை உயர்த்திட முடியாது. இதற்கு பொது முதலீட்டை அதிகரிப்பது அவசியமாகும். இதனைச் செய்திட மோடி அரசாங்கம் மறுத்துவருகிறது.   இவற்றைச் செய்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் தனியார் மூலதனத்திற்கு அப ரிமிதமான சலுகைகளை அளித்துக் க்கொண்டிருக்கிறது. இதைத்தான் நிதி அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலைமைகளில் இடதுசாரிக் கட்சிகள், ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கிடவும் உள்நாட்டுத் தேவை களைப் பெருக்கிடவும் முன்வர வேண்டும் என்றும் கோருகின்றன. இதனைச் செய்வதற்குப் பதிலாக  மோடி அரசாங்கம், பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி-யால் விளைந்த வருவாய் பற்றாக்குறையான 1 லட்சத்து 70  ஆயிரம் கோடி ரூபாயைச் சரி செய்திட இத்தொகையைப் பயன்படுத்த முயல்கிறது. எனவே, இச்சிறப்பு மாநாடு, வேலை வாய்ப்பை அதிகரித்திட பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும். அதுவரை மத்திய அரசாங்கம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரண வழங்கிட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் உத்தரவாதம் செய்திட வேண்டும். வேலை யிழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ் என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியாவை தனி யாருக்குத் தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் வேலை நாட்களை 200ஆக அதிகரித்திட வேண்டும். நிலுவைத்தொகைகளை வழங்கிடவேண்டும். விவசாயிகளுக்கு விவசாய நெருக்கடியி லிருந்து மீள ஒரு முறை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும். வயதானவர்கள் மற்றும் விதவைகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதி யத்தை 3000 ரூபாயாக அதிகரித்திட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபேர் 10-16 தேதிகளுக்கு இடையே நாடு  முழுவதும் பல்வேறு வடிவங்களில் கிளர்ச்சி  இயக்கங்களை நடத்திடுமானு இடதுசாரிக் கட்சிகளின் ச்றப்பு மாநபாடு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு சிறப்பு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

;