tamilnadu

img

மோடியின் இஸ்ரோ பயணமே சந்திரயான் தோல்விக்கு காரணம்

புதுதில்லி:
‘சந்திரயான் 2’ பின்னடைவுக்கு, பிரதமர் மோடியின் இஸ்ரோ பயணம்தான் காரணம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.“2008 - 09ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ்) அரசுதான், சந்திரயான் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே ஆண்டில்தான் சந்திரயானுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கடந்த 10 -12 வருடங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்தனர்.
ஆனால், ‘சந்திரயான் 2’ திட்டத்துக்கு பின்னால் நான்தான் உள்ளேன்’ என்பதை இந்திய மக்களுக்குக் காட்டி, ஒரு விளம்பரம் தேடும் நோக்கத்திற்காக மட்டுமே கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி இஸ்ரோவுக்கு வந்திருந்தார். அவர் இஸ்ரோவில் காலடி எடுத்து வைத்த தருணம்தான் விஞ்ஞானிகளுக்கு துர்திர்ஷ்டமாக அமைந்துவிட்டது என நான் நினைக்கிறேன். மோடி இஸ்ரோவுக்குச் சென்ற அன்றைய தினம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் மற்றும் சில மத்திய அமைச்சர்களும் அவருடன் சென்றனர். ஆனால், அவர்களை, ‘வர வேண்டாம்’ எனக் கூறி மோடி திருப்பி அனுப்பிவிட்டார்.இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

;