tamilnadu

img

முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

புதுதில்லி:
நாட்டின் முதுபெரும் தொழிற் சங்கத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா அக்டோபர் 31 வியாழ னன்று கொல்கத்தாவில் காலமானார். அவரது மறைவுக்கு சிஐடியு, ஏஐடியுசி ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் குருதாஸ் தாஸ் குப்தா கொல்கத்தாவில் வியாழக்கிழமையன்று காலைமரணமடைந்தார். அவருக்கு வயது 84 ஆகும். தோழர் குருதாஸ் தாஸ்குப்தா 1936 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதியன்று கிழக்கு வங்காளத்தில் பிறந்தார். கல்கத்தாவின் புகழ்மிக்க கல்லூரியான அசுதோஷ்கல்லூரியில் எம்.காம். பட்டம் பெற்றார். தேசிய அளவில் மாணவர் தலைவராகவும் மேற்குவங் காள ஏஐடியுசி பொதுச் செயலாள ராகவும் பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், தற்போது கட்சியின் திட்ட ஆணையத் தலைவராகவும் இருந்தார். இவரது துணைவியார், இவரைப் போன்றே தொழிற்சங்க ஊழியரான தோழர் ஜெயா தாஸ்குப்தா ஆவார். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

சிஐடியு இரங்கல்
சிஐடியு பொதுச்செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவரும் சிறந்த நாடாளு மன்றவாதியாக பல ஆண்டுக் காலம் பணியாற்றியவருமான தோழர்குருதாஸ் தாஸ் குப்தா மறைவுக்கு சிஐடியு தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது.  இந்தியாவின் முதல் மத்தியத்தொழிற்சங்கமாக,  தொழி லாளர் வர்க்க இயக்கத்தின் ஒற்றுமையை யும், போராட்டங்களையும் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தில் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையும் அறிவித்து நூறாண்டுகளுக்கு முன் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) உருவானது. தோழர் குருதாஸ் தாஸ்குப்தா, ஏஐடியுசி உருவான அதே நாளில் தன் கடைசிமூச்சை விட்டிருக்கிறார். அதன்பாரம்பரியத்தைத்தான் இன்றையதினம் ஏஐடியுசியும், சிஐடியு வும் முன்னெடுத்துச்சென்று கொண்டிருக்கிறது. தோழர் குருதாஸ் தாஸ்குப்தா பல ஆண்டுகாலம் ஏஐடியுசியின் பொதுச் செய லாளராக இருந்து வழிநடத்தினார்.
மாணவர் பருவத்திலே கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். தேசிய அளவில் சிறந்த மாணவர் தலைவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவராக வெகு காலம் இருந்தார். பின்னர், அவர் தொழிற்சங்க இயக்கத்துடன் இணைந்தார். தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் அவருடைய தொடர்பு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலானதாகும்.தோழர் குருதாஸ் தாஸ்குப்தா,நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கையின் ஆட்சிக்குஎதிராக தொழிலாளர் வர்க்கப்போராட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்காக, தொழிற்சங்கங் களின் ஒன்றுபட்ட மேடையை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங் களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் சுமார் 25 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்தார்.அந்த சமயத்தில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விளிம்புநிலையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதில் முன்னணியில் இருந்தார். இவை அவரை ஒரு முனைப்பான நாடாளு மன்றவாதியாக உருவாக்கியது.  சிஐடியு, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்காவும், நாடு மற்றும் நாட்டு மக்களின் ஜனநாயகம், ஒற்றுமை மற்றும்ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற் காகவும்  அவர் அளித்துள்ள மாபெரும் பங்களிப்புகளை நெஞ்சில் ஏந்தி,நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவருக்கு செவ்வணக்கத்தைச் செலுத்திக்கொள்கிறது.

தோழர் குருதாஸ் தாஸ்குப்தா மறைவு தொழிலாளர் வர்க்கத்துக் கும், நாட்டின் ஜனநாயக இயக்கத் திற்கும் பேரிழப்பாகும்.சிஐடியு நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவருக்குத் தன் மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறது. ஏஐடியுசி தோழர்களுக்கும், அவரைப் பிரிந்துதுயருற்றுள்ள அவரது குடும்பத் தினருக்கும் தன் நெஞ்சார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்

ஏஐடியுசி இரங்கல்
ஏஐடியுசி மாநிப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் ஆகப்பெரும் தலைவர்களில் ஒருவரும், ஏஐடியுசியின் முன்னாள் பொதுச் செயலாளருமான தோழர்குருதாஸ் தாஸ் குப்தா, உலக மயத்தின் கொடூரத் தாக்குதலால் தொழிற்சங்க இயக்கம் திகைத்த போது, ஒற்றுமையே பலம் என்று,அனைத்து தொழிற்சங்க ஒற்றுமைக்கு புதிய வலிமை வடிவம் சேர்த்தவர். சிவசேனை அலுவல கத்துக்கும் நேரில் சென்று, பொது வேலைநிறுத்தத்தை ஆதரிக்கக் கேட்டவர்.

தமிழகத்தில் நெய்வேலி லிக்னைட் காண்ட்ராக்ட் தொழிலாளர் போராட்டத்திற்கு முதுகெலும்பாய் நின்று அவர்களின்வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு முறையும் வெற்றிபெற துணை நின்றவர். வரி ஏய்ப்புகளைக் கண்டறிய உதவியதற்காக அரசு தந்த பெரியவெகுமதித் தொகையை, காலிஸ்தான் மோதல்களில் இறந்தவர் களின் விதவைகள், குழந்தைகள் நல்வாழ்வுக்காகத் தந்தவர்.விவசாயத் தொழிலாளர் நிலையை ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழுவின் தலைவராகப் பணியாற்றி யவர். பழைய செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க இதற்காகப் பய ணித்தவர். அவர் சமர்ப்பித்த அறிக்கை விவசாயத் தொழிலாளர் பற்றிய அரிய ஆவணமாகும்.அரசுப் பணியாளர் வேலைநிறுத்தம் செய்வதற்கு உரிமையில்லை என நீதிமன்றம் சொன்னபோது, அதனை வேலைநிறுத்தத் தால் முறியடிப்போம் என்று தொழிலாளர்களைத் திரட்டியவர்.ஏஐடியுசியின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பேதிட்டமிட்டவர். அவர் நேசித்த ஏஐடியுசியின் நூற்றாண்டு பிறக்கும் நாளில் அவர் இயற்கையுடன் ஒன்றிவிட்டார். இந்தியத் தொழிற்சங்க இயக்கத்துக்கு மட்டுமல்ல, ஜன நாயகத்தை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை, சமதர்மத்தை நேசிக்கும் சக்திகளுக்கு அவரது மறைவு பேரிழப்பாகும்.தோழர் குருதாஸ் தாஸ்குப்தாவுக்கு செவ்வணக்கம். 

;