tamilnadu

img

ஆண்டு வருமானமே 60 ஆயிரம்தான் ரூ. 132 கோடிக்கான வரியை ஏய்த்ததாக தொழிலாளிக்கு நோட்டீஸ்

போபால், ஜன. 17 - மத்தியப்பிரதேச மாநில ஏழைத் தொழிலாளி ஒருவர், 132 கோடி  ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக கூறி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் மோகனா என்ற இடத்தை சேர்ந்த வர் ரவிகுப்தா . ஏழைத் தொழிலாளி ஆவார். இவருக்கு ஆண்டு வரு மானமே 60 ஆயிரம் ரூபாய்தான்.  ஆனால், ‘தொழிலாளி’ ரவிகுப்தா, குஜராத்தில் வைர வியாபார நிறுவனம் நடத்தும் முத லாளி என்றும், 2011 செப்டம்பர் 9 முதல் 2012 பிப்ரவரி 13 வரையிலான காலத்தில், ரவிகுப்தா, வங்கிக் கணக்கு மூலம் ரூ. 132கோடிக்கு பணப்பரிமாற்றம்  செய்துள்ள  தாகவும் கூறி, வருமான  வரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

ஏய்க்கப்பட்ட வரி ரூ.3.49 கோடியை, உடனே கட்டவேண்டும்; இல்லாவிட்டால் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் ஏழைத் தொழிலாளி ரவி குப்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். வருமான வரித்துறை குறிப் பிட்டுள்ள அந்த கால கட்டத்தில் இந்தூரில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் மாதம் 6 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தாக கூறியுள்ள ரவிகுப்தா,  “ஏற்கனவே 2 முறை வந்த நோட்டீசுகளை பார்த்தபோது ஏதோ தெரியாமல் அனுப்பிவிட்டார்கள் என நினைத்தேன்.  ஆனால் இப்போது எனது சொத்துக்களை பறிமுதல் செய்வ தாக கூறி இருப்பதால் எனக்கு பயம் ஏற்பட்டு விட்டது. எனக்கு 2 இடத்தில் சொத்து இருக்கிறது. அதை பறித்து விடக்கூடாது என்பதற்காகவே வரு மான வரித்துறைக்கு தகவல் அனுப்பி இருக்கிறேன்” என்று ரவிகுப்தா கவலை தெரிவித்துள்ளார்.

;