tamilnadu

img

எல்லையில் பதற்றச் சூழல்

காஷ்மீரில் கொல்லப்பட்ட பாக். வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல இந்திய ராணுவம் அனுமதி

ஜம்மு, ஆக.4- காஷ்மீரில் கொல்லப்பட்ட 7 பாகிஸ்தான் வீரர்களின் உடலை கொண்டு செல்ல இந்திய ராணுவம் அனுமதியளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூர் நகரில் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத இயக் கத்தின் பயங்கரவாதிகள் ஊடுருவி யுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு ராணுவ வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டனர். காஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலை வன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடு ருவ உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், பதுங்கி யிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கர வாத இயக்கத்தினருக்கும், பாது காப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3 பயங்கர வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் உள்ளிட்டவை அவர் களிடம் இருந்து பறிமுதல் செய் யப்பட்டன. இதனிடையே, இந்திய எல்லைக்குள் கெரான் பிரிவில் ஊடு ருவும் முயற்சியாக பாகிஸ்தானிய அதிரடி படையினர் ஈடுபட்டனர். அவர்களை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து தடுத்தது. தொட ர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய அதிரடி படையினர் மற்றும் பயங்கரவாதி களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அவர்களின் உடல்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி யில் கிடக்கின்றன. தொடர்ந்து நிக ழும் கடும் மோதலால் அவர்களின் உடல்களை இந்திய ராணுவம் கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 7 பாகிஸ்தான் வீரர் களின் உடலை கொண்டு செல்ல இந்திய ராணுவம் அனுமதி வழங்கி யுள்ளது. அவர்களது உடல்களை கொண்டு செல்ல முறைப் படி வெள்ளை கொடி ஏந்தி அணுகும் படியும் ராணுவம் அறிவுறுத்தி யுள்ளது.