நியாயமல்ல
சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை நடந்ததை ஒப்புக்கொண்டு, அங்கு 1949இல் ராமர் சிலை உள்ளே வைக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும் முழு இடத்தையும் இந்து தரப்புக்கு அளிப்பது நியாயமல்ல என்று மனு தாரர்களில் ஒருவரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினருமான சர்ஃப்ராயப் கூறியுள்ளார்.
திருப்தியில்லை
“தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. தீர்ப்பு முழுவதையும் கவ னத்தோடு படித்த பிறகு எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்” என்று சன்னி வக்ஃப் வாரிய மூத்த வழக்கறிஞர் ஜஃபர்யாப் ஜிலானி கூறினார். தீர்ப்பை தாங்கள் மதிப்ப தாகவும் அவர் கூறினார்.
சட்டமீறல்
அயோத்தி தீர்ப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட உத்தரவுகள், அறிவிக்கைகளை மீறி உச்சநீதி மன்றத்தின் பத்திரிகையாளர் பகுதியில் கொண்டாட்டம் வெடித்தது. இது தெளிவான சட்டமீறல் என்று உச்சநீதிமன்ற செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி கூறினார்.
ஓவைசி அதிருப்தி
பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் தீர்ப்பு என்ன வாக இருந்திருக்கும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களில் உச்சமானதுதான். ஆனால், அங்கு தவறு நடக்க வாய்ப்பில்லை என்று கூற முடியாது என்று அயோத்தி தீர்ப்பை அவர் விமர்சித்துள்ளார்.தீர்ப்பு குறித்த தனது திருப்தி யின்மையை வெளிப்படுத்த தமக்கு உரிமையுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துஷார் காந்தி கருத்து
“காந்தி கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்திருந்தால், நாதுராம் கோட்சேதான் கொலையாளி; ஆனால் அவர் ஒரு தேச பக்தர் என்று தீர்ப்பு வந்திருக்கும்” என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் கருத்து
பல பத்தாண்டுகளாக தொடர்ந்த இந்த வழக்கு சரியான முடிவை எட்டியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.இது யாருக்கும் வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கப்படக் கூடாது என்றும் சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட யார் முயற்சி எடுத்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி கருத்து
பல பத்தாண்டுகளாக நிலவிய பிரச்சனையை உச்ச நீதிமன்றம் சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது.இது நீதிமன்ற நட வடிக்கைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்று நரேந்திர மோடி கூறயுள்ளார். “ராம் பக்தியோ ரஹீம் பக்தியோ, நாம் அனைவரும் தேசம் மீதான பக்தி உணர்வை வலிமைப்படுத்த வேண்டிய சமயம் இது’’ என்றும் மோடி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்பை வரவேற்றுள்ள அமித் ஷா, அனைத்து மத மக்களும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, “ஒரே இந்தியா - உயர்ந்த இந்தியா” எனும் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண் டும் என்று கூறியுள்ளார்.
கதவு திறப்பும் மூடலும்
இந்தத் தீர்ப்பு கோயில் கட்டுவதற்கான கதவுகளைத் திறந்துள்ளதுடன், பாஜக மற்றும் பிறர் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்கான கதவுகளை மூடியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜி வாலா கூறியுள்ளார்.
ஏமாற்றமளிக்கிறது: எஸ்.டி.பி.ஐ
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபா ரக் கூறியதாவது; நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடி யாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருந்தாலும் கூட, நீதிபதிகளின் தீர்ப்பு அப்படி அமையவில்லை. தீர்ப்பானது நீதியின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்ப டையிலும் இருக்கும் என நாங்கள் நம்பினோம். ஆனால், நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு என்பது ஏமாற்றமளிக்கிறது. நீதிமன்றமே பாபர் பள்ளி இடிப்பை சட்டவிரோதமானது என்று குற்றத்தை பதிவு செய்வதன் மூலம் லிபரான் கமிஷ னால் சுட்டிக்காட்டப்பட்ட 65 குற்றவாளிகளையும் உடனடி யாக கைது செய்ய வேண்டும்.