14 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்
புதுதில்லி, அக்.5- தென்மேற்கு பருவமழை யால் ஏற்பட்ட பாதிப்பில் நாடு முழுவதும் 1900 பேர் பலியாகி யுள்ளனர். 14 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளன. கேரளாவில் ஜூன் 8 அன்று தொடங்கிய தென்மேற்கு பருவ மழை கடந்த 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. சில பகுதி களில் பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடு தலாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை அதிக சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 1,874 பேர் பலியாகியிருப்பதாகவும், 738 பேர் காயமடைந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 46 பேர் மாயமாகியுள்ளனர். 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட கால்நடை களும் உயிரிழந்தன. இந்த மழை வெள்ளத்தால் 1.09 லட்சம் வீடுகள் முற்றிலும் இடிந்ததாகவும், 2.05 லட்சம் வீடுகள் பாதியளவு சேதமடைந்தி ருப்பதாகவும் 14.14 லட்சம் ஹெக் டேர் பயிர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறி யுள்ளது. 4 மாதங்கள் நீடித்த தென்மேற்கு பருவமழையில் நாடு முழுவதும் 357 மாவட்டங் கள் வெள்ள பாதிப்பை அடைந்த தாக கூறியுள்ளது.