tamilnadu

img

ஆர்ஜெடி-யின் மூத்த தலைவர் பிரசாத் சிங் கட்சியிலிருந்து விலகல்...  லாலு கட்சிக்கு கடும் பின்னடைவு... 

பாட்னா 
நாட்டின் வடக்கு பகுதி மாநிலமான பிகாரில் எதிர்க்கட்சியாக இருப்பது ராஷ்ட்ரிய ஜனதா தளம். இந்த கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான  லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நிலையில், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகன்களுடன் கட்சியை கவனித்து வருகிறார். 

இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், துணை தலைவருமான ரகுவன்ஸ் பிரசாத் சிங் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பிரசாத் சிங் தற்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமாரை சந்தித்து அவரது கட்சியில் சேருவேன் எனக் கூறியுள்ளார்.    

இன்னும் இரு மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ஆளுங்கட்சிக்கு தாவுவது அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. 
கட்சி மாறிய ரகுவன்ஸ் பிரசாத் சிங் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர என்பது குறிப்பிடத்தக்கது.

;