புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்துகுணமடைந்தோர் விகிதம்69.80 சதவீதமாக உயர்ந்துள் ளது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புநாளுக்கு நாள் தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளுக் காக அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கான நல மையங்கள், தனிவார்டு கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு தரப்பினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் அதிகரித்துள் ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும்கொரோனா பாதிப்பு களுக்காக 28.21 சதவீதம்பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 69.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோன்று உயிரிழப்பு விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.