tamilnadu

img

சமூக செயற்பாட்டாளர்களை பழிவாங்குவது அரசுக்கு மதிப்பை தராது... பீமா கோரேகான் வழக்கில் நீதி வேண்டும்....

புதுதில்லி:
ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக சேவை செய்து வருபவர்களுக்கு எதிராக, பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது, எந்தவொரு அரசாங்கத்திற்கும் கவுரவத்தைஅளித்திடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் கடிதம் அனுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பீமா கொரேகான் வழக்குடன் சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள்செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திக்கொண்டிருப்பது தொடர்பாக, ஞாயிறு அன்று பிருந்தா காரத் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஅரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுவருவதற்குத் தங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

மேலும், தேசியப் புலனாய்வு முகமை விசாரணைசெய்யும் வழக்குகள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். கைது செய்யப்பட்டுள்ள 11 பேர்களில் 9 பேர் ஏற்கெனவே ஈராண்டு காலத்திற்கும் மேல் சிறையில் காவலடைப்புக் கைதிகளாக இருந்து விட்டார்கள். இவ்வழக்கில்புலன் விசாரணை செய்வதற்கு இரண்டு ஆண்டு காலம்என்பது தேவைக்கும் அதிகமான காலமாகவே இருந்தபோதிலும், தேசியப் புலனாய்வு முகமை புலன்விசாரணையை முடிக்காமலும், சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களின் பிணை விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டும் வருகிறது. 

சிறைப்படுத்தப்பட்டு இருப்பவர்களில் பலரின் உடல் நிலை மிகவும் நலிவடைந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சுதா பரத்வாஜ், சோமா சென், சுரேந்திரா கட்லிங், மகேஷ் ரவுத், அருண் பெரைரா, சுதிர்தாவ்லே, ரோனா வில்சன், வெர்னன் கான்சாடல் வேஸ், வரவர ராவ், கவுதம் நவ்லகா மற்றும் ஆனந்த்டெல்டும்டே ஆகியவர்கள் கோவிட்-19 கொரோனாவைரஸ் தொற்று கடுமையாகப் பரவிக்கொண்டிருக்கக் கூடிய இன்றைய நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலையில், அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே வேறுபல நோய்களுடனும்அவதிப்பட்டு வருபவர்கள் ஆதலால், இவ்வாறு அவர்கள்அடைத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு ஆறாதரணமாக ஏற்படுத்தி இருக்கிறது. இதில் மிகவும் சமீபத்திய உதாரணம், கவுதம் நவ்லகா மீது ஏவப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும். அவருடைய பிணை மனு, தில்லியில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்த சமயத்தில், அவரை தேசியப் புலனாய்வு முகமைக்காவல்துறையினர் மும்பைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே அவரை, சிறைக்கு அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில், தனிமைப்படுத்தல் வசதிக்காக வைத்திருக்கிறோம் (quarantine) என்று சொல்லி அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்கே சுமார் 350 பேர் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மூன்று குளியல் அறைகள் மட்டுமே. வாளிகளோ, குடுவைகளோ கிடையாது. நவ்லகாஒரு சிறிய வகுப்பறையில் 34 பேர்களுடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார். நிச்சயமாக மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ள இடத்தில் இதரர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் விதத்தில் அவர் இருத்திவைக்கப்பட்டிருக்கிறார். அவர், செரிமானப் பிரச்சனைகள், மற்றும் மட்டுமீறிய உயர் ரத்த அழுத்தம் நோய்களால்அவதிப்பட்டு வருபவராவார். அவர் தனிமைப்படுத்தப் படும் கால அளவு முடிந்தபின்னரும், அவரைத் தண்டிக்கவேண்டும் என்ற விதத்தில், அவர் அங்கேயே வைக்கப்பட்டிருக்கிறார்.

ஓர் அரசியல் கைதி இவ்வாறு நடத்தப்படுவது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவும், வருந்தத்தக்க விதத்திலும் இருக்கிறது. அவருடைய பிணை மனுநிலுவையில் இருக்கும் வரை, அவர் வைக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் குறித்து தாங்கள் பரிசீலனைசெய்ய வேண்டும் என்றும், அவரை, மிகவும் சுகாதாரவசதியுடன் உள்ள இடத்திற்கு மாற்றப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மற்றுமொரு அதிர்ச்சியளிக்கக்கூடிய உதாரணம், வரவர ராவ் கைது செய்யப்பட்டிருப்பதாகும். அவருக்கு 81 வயதாகிறது. மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்து வருபவர். அவருக்கு பிணை மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், எல்லா வசதிகளுடனுமிருந்த ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, மூன்றே நாட்களில் அங்கேயிருந்து விடுவித்து, சிறைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவருடைய உடல்நலம் மிகவும் மோசமாக மாறியுள்ள நிலையிலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் சிறையில்அடைக்கப்பட்டிருக்கிறார். இது, அவர் உயிர்வாழ்வதற்கான உரிமையை மறுக்கும் செயலே தவிர வேறல்ல.திருமதி சுதா பரத்வாஜூக்கு 60 வயதாகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா ஆகியவற்றுடனும் மற்றும் காச நோயுடனும் கடந்த பல ஆண்டு காலமாகவே அவதிப்பட்டு வருபவர்.சோமா சென்னுக்கு, 62 வயதாகிறது. இவரும் உயர் ரத்த அழுத்தம், கடுமையான கீல்வாதம், எரிச்சலுடனான குடல்நோய் மற்றும் கண் அழுத்த நோயால் அவதிப்படுபவர்.இவர்கள் அனைவருக்கும் நியாயமற்ற முறையில் பிணை மறுக்கப்பட்டிருக்கிறது.இவர்கள் பிணைமனுக்களை மறுப்பதில் எவ்வித நியாயமான காரணமும் கிடையாது. ஏனெனில் இவர்கள்அனைவருமே விசாரணையின்போது ஆஜராவதற்குத் தயாராகவே இருப்பவர்கள். கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலாவது, இவர்களின் பிணை மனுக்களை, தேசியப் புலனாய்வு முகமை ஆட்சேபிக்காது இருந்திட வேண்டும். 

உச்சநீதிமன்றம், கொரோனா வைரஸ் தொற்றின்காரணமாக, சிறைகளில் விசாரணைக் கைதிகளாகஅடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை சிறைகளிலிருந்து விடுவித்திட வேண்டும் என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசாங்கங்களுக்கு, சிறைகளில் உள்ள “ஜனநெருக்கத்தைக் குறைத்திடுங்கள்” (decongest jails) என்று அறிவுரைகளை வழங்கியுள்ள நிலையிலும், அதனைச் செய்யாதிருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ளமக்களுக்காக சேவை செய்து வருபவர்களுக்கு எதிராக, பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது, எந்தவொரு அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாது. மும்பை சிறைகளில் உள்ளசிறைவாசிகள் மற்றும் காவல்துறையினர் கோவிட்-19கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிக்கொண் டிருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இவ்வாறு இவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது, மிகவும் ஆபத்தானதாகும்.நான் மேலே எழுப்பியுள்ள பிரச்சனைகளைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு பிருந்தா காரத், அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.       (ந.நி.)

;