tamilnadu

உச்சநீதிமன்றத்தில் ராதாபுரம் வழக்கு இன்று விசாரணை?

புதுதில்லி:
2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள்வித்தியாசத்தில் தோற்றதாக முடிவு அறிவிக்கப் பட்டது. தபால் ஓட்டு எண்ணிக்கையிலும், கடைசிரவுண்டு ஓட்டு எண்ணிக்கை யிலும் முறைகேடு நடந்தி ருப்பதாக புகார் கூறிய அப்பாவு இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குத் தொடுத்தார்.இவ்வழக்கில் தபால் ஓட்டுகள், மற்றும் இறுதி ரவுண்டுகளாக 19,. 20, 21 ஆகிய சுற்றுகளை மீண்டும்எண்ண வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இன்பதுரை  உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். உச்ச நீதிமன்றம், மறுவாக்குஎண்ணிக்கை முடிவை வெளியிட அக்டோபர்  23 ஆம் தேதி வரை தடைவிதித்தது..இந்நிலையில் அப்பாவு தரப்பில்,மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடை முடிந்துவிட்டதையடுத்து, வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு வியாழனன்று கூறியுள்ளது. இதனால் ராதாபுரம் வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வர அதிகவாய்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டா ரத்தில் கூறப்படுகிறது. 

;