tamilnadu

img

ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை

புதுதில்லி:
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்றஉறுப்பினர் அப்பாவு,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும்எண்ணுவதற்கு  உத்தரவிட்டது.
இதன்படி, ராதாபுரம் தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள், உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளியன்று  தேர்தல் ஆணைய அதிகாரிகளால் எண்ணப்பட்டன.இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை எம்எல்ஏ தரப்பில் சிறப்பு அனுமதிமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதிஅருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுஇன்பதுரை எம்எல்ஏ தரப்பில், ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை கெஜட் அதிகாரியாக தலைமை ஆசிரியர் அங்கீகரித்திருப்பதாகவும், ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் கிடையாதென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை சென்னை உயர்நீதிமன்றம் தனது விசாரணையின்போது கவனத்தில் கொள்ளவில்லை என்றும், ஆதலால் தலைமை ஆசிரியருக்கு கெஜட் அதிகாரிக்கானஅதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்என்றும் இன்பதுரை தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்தலாம், அதேநேரத்தில் மறுஉத்தரவு வரும் வரையில் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து மனு மீதான விசாரணையை 23 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம், இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராமானுஜம் ஆஜராகி,உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து முறையீடு செய்யப்பட்டது. அப்போது தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தாலும் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, உச்சநீதிமன்ற ர்ப்புகுறித்த மெமோவும், மறுவாக்கு எண்ணிக்கை குறித்ததலைமை பதிவாளரின் அறிக்கையும் தாக்கலாகட்டும் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

;