புதுதில்லி,ஜன.7- ஈரான் ராணுவ படைத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைக் கண்டித்து தில்லியில் செவ்வாயன்று அமெரிக்க தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசிம் சுலைமானி உள்பட 9 போ் பலியான தால் ஈரானுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்ற அமெரிக்காவைக் கண்டித்து செவ்வாயன்று தில்லியில் அமெரிக்க தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.