tamilnadu

img

‘பிரதமர் மோடி சிக்கனமானவர்..’ அமித் ஷா சொல்லும் புதுக்கதை!

புதுதில்லி:
பிரதமர் மோடி சிக்கனமானவர், அவரைப் போன்ற எளிமையான பிரதமரைப்பார்க்க முடியாது என்று பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.வெளிநாட்டுக்குச் செல்லும் போது, குறைவான எண்ணிக்கையிலேயே அதிகாரிகளை அழைத்துச் செல்கிறார்; விமான நிலைய ஓய்வறைகளிலேயே குளிக்கவும், ஓய்வெடுக்கவும் செய்கிறார்; ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதில்லை என்றெல்லாம் அமித்ஷா மோடியின் புகழ் பாடியி
ருந்தார்.இந்நிலையில், அமித்ஷா உண்மையைத்தான் சொல்கிறாரா? இது என்னபுதுக்கதை என்று சமூகவலைத் தளங்களில் பலரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது ஆடம்பரத்தையும் பிரிக்க முடியாது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஒபாமா இந்தியா வந்தபோது, அவரை வரவேற்பதற்காக, மோடி அணிந்த 10 லட்ச ரூபாய் கோட் பிரபலமானது. அந்த கோட்டில், மோடி வரி வரியாக தனது பெயரையும் பொறித்து, ஒபாமாவையே திகைக்க வைத்தவர்.அதுமட்டுமன்றி, மோடியின் ‘ஜெட்புளூ டிசைனர்’ குர்தாக்கள், ஜாக் கெட்டுக்கள், காஷ்மீர் வெள்ளாட்டு சால்வைகள், சூட்டுக்கள், ‘புல்காரி பிராண்ட்’ மூக்குக் கண்ணாடிகள், மொவாடோ கைக் கடிகாரங்கள், ‘மாண்ட் பிளாங்க்’ பேனாக்கள் என்றுஆடம்பரமே மோடியின் அடையாளமானது. ‘பிட்னெஸ் சேலன்ஞ்’ என்ற பெயரில் மோடி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். அதற்கு செலவிடப்பட்ட தொகை மட்டும் ரூ. 35 லட்சம்என்று தகவல்கள் வெளியாகின.கடந்த 5 ஆண்டுகளில் மோடி வெளிநாடுகளைச் சுற்றிவந்த செலவு ரூ. 4ஆயிரத்து 400 கோடிகள். இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்,கடந்த 5 மாதங்களில் மட்டும் 443 கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பயணச் செலவுகள் தனி.உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, அமித்ஷா யாரை ஏமாற்றுவதற்காக கதை விடுகிறார் என்று விவாதங்கள் முன்னுக்கு வந்துள்ளன.

;