tamilnadu

img

மகாராஷ்டிரா அரியானாவில் அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு


மகாராஷ்டிரா அரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று அறிவித்துள்ளார். 

 vஇந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தில்லியில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியும், அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைகிறது. எனவே,  மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளும், அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 8.94 கோடி வாக்காளர்களும், அரியானாவில் 1.80 கோடி வாக்காளர்களும் உள்ளனர். மகாராஷ்டிராவுக்கு 2 சிறப்பு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்கள். திங்கட்கிழமை முதல் தேர்தல் அதிகாரிகளக்கு பயிற்சி தொடங்குகிறது.

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் அக்டோபர் 21 ல் இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்ரவாண்டி நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத்தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளர். மேலும் அக்டோபர் 24ம் தேதி இடைத்தேர்தலில் நடைபெறும்  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 
 

;