tamilnadu

img

திசையன்விளையில் வாலிபரை சரமாரியாக தாக்கிய காவல் அதிகாரி

திருநெல்வேலி:
காவல்துறை அராஜகத்தின் தொடர்ச்சியாக திசையன்விளையில் வாகனச் சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை  காவல்உதவி ஆய்வாளர் தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை மெயின் பஜார் காமராஜர் சாலையில் ஒருவங்கி அருகே காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் மற்றும் போலீசார்  வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சீருடைஇன்றி வாகனச் சோதனையில் ஈடுபட்டதாககூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் உள்பட 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றதால்  போலீசார் காரில் சென்று அவர்களை மடக்கினர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். சிக்கிக் கொண்ட ஒரு வாலிபரை   உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்கியுள்ளார். மற்ற போலீசாரும்  வாலிபரின் கைகளை பிடித்துக் கொண்டனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோஎடுத்து அதை வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில் இந்த வீடியோவில் பதிவாகி உள்ள நபர்களை நேரில் அழைத்து வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அரிகரன் பிரசாத் விசாரணை நடத்தினார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பிரதாப் திருமணத்திற்காக விடுப்பில் சென்றுள்ளதால் அவரிடம் விசாரணை நடைபெறவில்லை என்று  கூ றப்படுகிறது.

;