tamilnadu

img

ஏமாற்றமளிக்கும் மோடி அரசின் ‘விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்’ -ஆர்.மனோகரன்

சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டத்தை (பிரதம மந்திரி கிசான் மான் தன் யோஜனா) பிரதமர் மோடி துவக்கி வைத்து தம்பட்டம் அடித்துள்ளார். இத்திட்டத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுக ளுக்கு ரூ.10774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆயுள் காப்பீட்டு கழகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாம். சத்திரச் சாப்பாட்டிற்கு சாமியாரி டம் அனுமதி. விவசாயிகள் தங்களுக்கான ஓய்வுகால பலனை தாங்களே தீர்மானித்துக் கொள்ள இலவச ஆலோசனை வழங்குகிறது இத்திட்டம். 

நாட்டின் பொருளாதாரமே வீழ்ந்து கிடக்கிறது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. உற்பத்தித்துறை தொடர்ந்து சரிந்து வருகிறது. வேலை வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் கடந்த காலாண்டில் 2019 ஜுன் முடிய 5 சதவீதமாக குறைந்துள்ளது. விவசாய உற்பத்தியில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் மோசடி மோடி அரசு நாடு வளர்கிறது என்ற தம்பட்டம் அடிப்பதை நிறுத்துவதில்லை. விவசாயிகளை தனது அரசு பாதுகாக்கும் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது. “மேக் இன் இந்தியா” எந்த பலனையும் அளிக்கவில்லை. தொழில்துறை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9.6 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதுபோன்ற பல புள்ளிவிவரங்களை தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) கூறுகிறது.  விவசாய உற்பத்தியை பெருக்க, விவசாயி கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய, விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கொடுக்க முடியாத, நீர்ப்பாசன வசதி களை மேம்படுத்தாத, இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதித்து துன்பத்தில் துயறுரும் விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்கி பாதுகாக்காத, விவசாய நிலங்களை பிடுங்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கிற கொடுமைகளை அரங்கேற்றி கொண்டிருக்கும் மோடி அரசு, விவசாயி களுக்கு ஓய்வூதியம் வழங்கப் போகிறதாம்.

நடைமுறை என்ன?

இத்திட்டத்தில் 18 வயதிலிருந்து 40 வயது வரையிலான விவசாயிகள் சேரலாம். 18 வயது உடையவர் மாதம் ரூ.55.00, 19 வயதில் ரூ.58.20, 20 வயதில் ரூ. 61.00,  இப்படியாக 40 வயதில் சேர்பவர்கள் ரூ.200.00 செலுத்த வேண்டும். இதே தொகையை அரசும் மாதாமாதம் செலுத்தும். இதற்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒதுக்கிய நிதியை பார்த்தால் நாட்டின் விவசாயிகள் அனைவருக்கும் இதில் இணைவது சாத்திய மில்லை என்பது தெளிவு இத்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் இணைய முடியாது. 5 ஏக்கர் வைத்துள்ள சிறுவிவசாயி 2.5 ஏக்கர் வைத்துள்ள குறு விவசாயிகள்தான் சேரலாம். 

தேசிய ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர்கள் ஈட்டுறுதி திட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக திட்டம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதான் மந்திரி லகு வியாபாரி மான் தன் யோஜனா” திட்டங்க ளில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது. நிறுவனங்கள் பெயரில் விவசாய நிலங்களை சாகுபடி செய்பவர்கள், அரசு அமைப்பு பதவிகளை வகித்தவர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கள், நகராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோரும் இத்திட்டத்தில் சேர முடியாது. நரசிம்மராவ் காலத்தில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசு பென்சன் குறைந்தபட்சம் ரூ.1000 பெறுபவர், நல வாரியங்கள் மூலம் பென்சன் ரூ.1000 வாங்கக் கூடியவர்க ளுக்கும், பயனளிக்காது. அப்படி என்றால் நாடு முழுவதும் எத்தனை விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முடியும்?. எந்தவித விபரமும் திட்ட அறிக்கையில் இல்லை.விவசாயி கட்ட வேண்டிய தொகையை தவணை தவறா மல் கட்ட வேண்டும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கட்டவில்லை என்றால் அவருக்கு இத்திட்டத்தில் இடமில்லை.

செலுத்திய பணத்திற்கு உரிய பலன் கிடைக்குமா?

18 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள வர்கள் மாதாமாதம் செலுத்திவிட்டு 60 வயது வரை காத்திருக்க வேண்டும். இடையில் இறந்து போனால் எல்ஐசி நிறுவனம் கட்டிய தொகையை வட்டியுடன் கொடுக்குமாம். 60 வயதிற்குமேல் மாதம் ரூபாய் 3000 பென்ஷன் கிடைக்கும். இறந்து போனால் மனைவிக்கு ரூபாய் 1500 கிடைக்கும். விவசாயி செலுத்தும் தொகைக்கு குறைந்தபட்சம் ரூ.100 என்றால் கூட ரூ. 8 சதவீத கூட்டு வட்டி என்றால் ரூ.1.50 லட்சம் சேர்ந்துவிடும். தற்போது தபால் அலுவல கங்கள் வழியாக “செல்வமகள் சேமிப்பு திட்டம்” ஒன்று உள்ளது. அதில் மாதம் ரூ.1000 செலுத்தினால் 7 ஆண்டுகளில் கட்டும் தொகையில் இரண்டு பங்கு தருகிறார்கள். அதாவது 1000x12 =12000, 1200x7= 84000, 2 மடங்கு (84000+84000) = ரூ1,72,000/- ரூபாய் கிடைக்கும். இதுபோன்று எல்ஐசியில் பிரீமியத் தொகைக்கு ஏற்ப பென்சன் திட்டங்கள் உள்ளன. இவைகளில் எல்லாம் கூட பயனாளர்கள் எப்படி இழப்பிற்குள்ளா கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. இத்திட்டத்தில் நாம் பெறப்போவது எவ்வளவு? இந்திய சராசரி ஆயுட்காலம் 65 வருடங்கள், மாதம் ரூ.3000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் பெறப்போவது 5x12 =60xரூ.3000 =1,80,000 மட்டுமே. விவசாயிகள் கையை எடுத்தே அவர்கள் கண்ணைக் குத்தும் மோசடி யைத்தான் இத்திட்டத்தில் பார்க்க முடிகிறது.

ஏன் விவசாயிகளை கணக்கிட்டு அவர்க ளுக்கு அரசே பிரீமியம் முழுவதும் செலுத்தி இத்திட்டத்தை நடத்தக்கூடாது? கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாரி வழங்கும் அரசு, விவசாயிகளுக்கு மட்டும் போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது.

;