tamilnadu

img

மகாராஷ்டிர விவகாரத்தால் கடும் அமளி நாள் முழுதும் முடங்கிய நாடாளுமன்றம்

புதுதில்லி, நவ. 25- நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் கடும்  அமளியில் ஈடுபட்டதால், நாளை  பிற்பகல் 2 மணி வரை, இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் மக்களவை திங்கள் காலை 11 மணிக்கு கூடிய போது, மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தை முன்னிறுத்தி, காங்கிரஸ்,  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சி னையை எழுப்பின. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மகாராஷ்டிரத்தில் நடைபெற்றிருப்பது ஜனநாயகப் படுகொலை என்றார். தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், 2 முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, மூன்றாவது முறையாக கூடிய போது, எழுந்த அமளியால், செவ்வாய் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது.

மாநிலங்களவையிலும் மகா ராஷ்டிர அரசியல் விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், பிற்பகல் 2 மணி  வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கூடியபோது அமளி எழுந்ததால், செவ்வாய் பிற்பகல் 2  மணி வரை, மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  முன்னதாக, மகாராஷ்டிராவில் பாஜக அரசு பதவியேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமது கட்சி  எம்.பிக்களுடன் நாடாளுமன்ற வளா கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

;