tamilnadu

img

பாலாரிவட்டம் பாலத்தை புனரமைக்கலாம் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புது தில்லி:
பாலாரிவட்டம் மேம்பாலத்தை இடித்து புனரமைக்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. பாலத்தின் வலுவை அறிய எடை சோதனை நடத்த வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் மாநில அரசு வெற்றி பெற்றது. நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலோசனை நிறுவனமான கிட்கோவின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது. பாலத்தை இடிக்க வேண்டிய அவசியம் குறித்து மாநில அரசு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை நீதிமன்றம் பரிசீலித்தது. நிபுணர் குழு அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கிட்கோ மற்றும் கட்டுமான நிறுவனம் நீதிமன்றத்தை கோரியது. ஆனால் பொது நலனுக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பாலம் விரைவில் இடித்து புனரமைக்கப்பட வேண்டும் என்று மாநில அரசு வாதிட்டது. நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொது நலனுக்கான இந்த  தீர்ப்பை அளித்தது.

;