tamilnadu

img

‘பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது உலகறிந்தது’

புதுதில்லி:
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டுபிரச்சனை என்றும் இதில் மற்ற நாடு களின் தலையீடு தேவையில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “இந்த (பாஜக) அரசுடன் நான்பல பிரச்சனைகளில் முரண்பட்டுள் ளேன். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் நான் மிகவும் தெளிவு படுத்த விரும்புகிறேன். காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. இதில்தலையிட பாகிஸ்தானுக்கோ வேறுஎந்த வெளிநாட்டுக்கோ எவ்விதமான உரிமையும் இல்லை,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட மற்றொரு செய்தியில், ‘’ஜம்மு காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. அங்கு நடக்கும் வன்முறைகள் பாகிஸ்தான் ஆதரவுடன், தூண்டு தலுடன் நடைபெறுகிறது. பயங்கர வாதத்திற்கு மிக முக்கியமாக ஆத ரவு அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்பது உலகம் அறிந்த ஒரு விஷயம்,” என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜம்மு-காஷ்மீர்விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் பாகிஸ்தான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தேவை யில்லாமல் ராகுல் காந்தியின் பெயர்விஷமத்தனமாக இழுக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் கூறிய பொய்கள் மற்றும் தவறான தகவல்களை நியாயப்படுத்த இவ்வாறு செய்யப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்பகுதிகள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்பதில் இந்த உலகில் உள்ள யாருக்கும் எந்த சந்தேகமும்வேண்டாம் என்று அந்த அறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ளது.

;