tamilnadu

img

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது

புதுதில்லி,டிச.4- ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர் பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.   ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. இதில்  சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கா ததால் தில்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் 100 நாள்களுக்கும் மேலாக அடைக்கப் பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்ப ரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனு மீது புதனன்று தீர்ப்பு அளிக் கப்பட்டது- நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜாமீனில் இருக்கும் காலத்தில் ஆதாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது,  சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, பத்திரிகைகளுக்கு பேட்டியோ அல்லது இந்த வழக்குத் தொடர்பாக வெளிப்படை யான அறிவிப்புகளையோ வெளியிடக் கூடாது.  2 லட்சம் ரூபாய்க்கான பிணைத் தொகையும், அதற்கு ஈடாக 2 பேரின் உத்தர வாதமும் வழங்க வேண்டும், ஜாமீனில் இருக்கையில் நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக் கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் ப.சிதம்ப ரத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இதனால் தில்லி திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் வெளியே வரவுள்ளார்.

;