tamilnadu

img

‘பத்மஸ்ரீ’யை திருப்பித் தந்த உருது எழுத்தாளர்.. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

புதுதில்லி:
மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அறிவுஜீகள், திரைக் கலைஞர்கள் உட்பட பலரும் மோடி அரசுக்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளர்கள் பலர்,தங்களின் எதிர்ப்பை காட்டும் விதமாக, அரசு வழங்கிய விருதுகளை திருப்பி அளித்துவருகின்றனர்.அந்தவகையில் பிரபல உருது மொழி எழுத்தாளர் முஸ்தபா உசேனும், தனக்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை திருப்பி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.“நாட்டில் அச்சம் மற்றும் வெறுப்பு நிறைந்த சூழலை நாம் அனுபவித்து வருகிறோம். இதனால் நான் மூச்சுத் திணறுகிறேன். என் மனசாட்சி என்னை குத்துகிறது.இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்க முடியாது. எனவே பத்மஸ்ரீ விருதை திரும்ப கொடுக்க முடிவு செய்துள்ளேன்’ என்று முஸ்தபா உசேன் கூறியுள்ளார்.“நகைச்சுவை எழுத்தாளரான தனது வாழ்க்கையில் இருந்து சிரிப்பு நீங்கி விட் டது” என்றும் வருத்தத்துடன் முஸ்தபா உசேன் குறிப்பிட்டுள்ளார்.

;