tamilnadu

img

வாகன விற்பனை வீழ்ச்சிக்கு ‘ஓலா’, ‘உபேர்’ காரணமல்ல!

புதுதில்லி:
‘ஓலா’, ‘உபேர்’ போன்ற வாடகைக் கார் பயன்பாடு அதிகரித்ததே, நாட்டில் வாகன விற்பனை வீழ்ச்சிக்குக் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து, பல்வேறு தரப்பிலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.பயணிகள் வாகன சரிவிற்கு ஓலா, உபேர்காரணம் என்றால், லாரி, டிப்பர், டிரக்கர்உள்ளிட்ட நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை கடந்த மாதம்மட்டும் 54.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து இருந்திருக்கிறதே அதற்கு யார்காரணம்? முதன் முறையாக 75 தேசிய வழித்தடங்களிலும், போக்குவரத்து 30 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அனைவரும் ஓலா, உபேர்கார்களை பயன்படுத்தியிருந்தால் சாலையில்தானே சென்றிருக்க வேண்டும். பறந்தா சென்றார்கள்? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.இதனிடையே, வாகன விற்பனை வீழ்ச்சிக்கு, நிதியமைச்சர் கூறும்காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை என்று மாருதி கார் உற்பத்தி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஷஷாங்க் ஸ்ரீவத்சாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ஓலா மற்றும் உபேர் வாடகைக் கார் வாகனச் சேவை, சுமார் 6 முதல்7 ஆண்டுகளாக நாட்டில் உள்ளது. அப்போதெல்லாம் வாகன விற்பனையில் ஏன், தொய்வு எதுவும் ஏற்படவில்லை?” என்று அமைச்சருக்கு கேள்விஎழுப்பியுள்ளார். 
அலுவலகங்களுக்குச் செல்வதற்கு வேண்டுமானால், அமைச்சர் கூறுவது போல ஓலா, உபேர் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் இருக்கலாம்; ஆனால், குடும்பத்துடன் செல்வதற்கும்,வார இறுதி சுற்றுப்பயணங்களுக்கும் மக்கள் சொந்த வாகனங்களைத்தான் விரும்புவார்கள் என்றும் ஸ்ரீவத்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

;