tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையால் ராணுவத்திற்கு ஆள் கிடைக்கும்.... இது தலைமை தளபதி பிபின் ராவத்தின் கணக்கு

புதுதில்லி:
புதிய கல்விக் கொள்கையானது, கிராமப்புற இளைஞர்களை அதிகளவில் ராணுவத்திற்கு கொண்டு வருவதற்கு உதவும் என்று முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ‘மகிழ்ச்சி’ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ராணுவ அகாடமியில் அவர் பேசியிருப்பதாவது:அதில், “அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையானது(NEP-2020), நாட்டில் கற்றல் செயல் முறையை மாற்றும். கல்லூரி மட் டத்தில் பல்வேறு நிலை உள்நுழைவு மற்றும் வெளியேறும் திட்டங்கள் நமது இளைஞர்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். இது, இராணுவத்தின் ஆயுதப்படை பிரிவு சிப்பாயாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை அடையாளம் காண உதவும்” என்று கூறியுள்ளார்.

அதாவது, புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் எப்படியும் பள்ளிக் கல்வியைத் தாண்ட முடியாது; அவர்களுக்கு மதிப்பான வேலையும் கிடைக்காது; இதனால் அவர்களில்ஒருபகுதியினர் ராணுவ பணிகளை நோக்கி திரும்புவார்கள் என்பதையேசூசகமாக பிபின் ராவத் வெளிப்படுத்தியுள்ளார்.

;