tamilnadu

img

இந்திய பணக்காரர் பட்டியலில் 8 வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடமாம்

இந்திய பணக்காரர் பட்டியலில் 8 வது முறையாக தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். 
ஐஐஎப்எஉல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி  ரூ3லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து 8வமு முறையாக முதலிடத்தில் உள்ளார். ரூ1லட்சத்து 86 ஆயிரத்து500 கோடி சொத்து மதிப்புடன் எஸ்.பி இந்துஜா சகோதரர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். விப்ரே நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 
இதேபோல் எல்.என் மிட்டல் 1 லட்சத்து 1300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4 வது இடத்திலும், கவுதம் அதானி 94 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5வது இடத்திலும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.