tamilnadu

மோடியின் தம்பட்டம் தேர்தல் விதி மீறல்தான்

புதுதில்லி, மார்ச் 30-


விஞ்ஞானிகள் ஈட்டிய சாதனையைபிரதமர் மோடி தனதாக்கிக்கொண்டது, நிச்சயமாக தேர்தல் நடத்தை விதிகளைமீறிய செயலேயாகும் என்று தலைமைத்தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி, தேர்தல் நடத்தைவிதிகளை மீறி நாட்டிற்கு உரை யாற்றியது சம்பந்தமாக நான் அனுப்பியிருந்த முறையீடு சம்பந்தமாக, தங்க ளின் முதன்மைச் செயலாளரிடமிருந்து மார்ச் 29 தேதியிட்ட கடிதம் கிடைத்தது.இதனை ஆய்வுசெய்து அறிக்கை அனுப்புவதற்காக அமைக்கப்பட்ட ஆணையம், கூறிய கருத்துக்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட பத்தியை மீண்டும் நான் கீழே தருகிறேன்:“இதனை ஆய்வு செய்த குழு, தேர்தல் நடத்தை விதி பாகம் 7இல் பத்தி 4இல் கூறப்பட்டுள்ளதுபோன்று அதிகாரப்பூர்வமான ஊடகத்தைத் துஷ்பிரயோகம் செய்திடும் ஷரத்துக் கள் நம்முன் வந்துள்ள புகாரில் உள்ள அம்சங்களுக்குப் பொருந்தாது, என்ற முடிவுக்கு வருகிறது.”அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்கள் உரை ஒளிபரப்பப்படுமா?நான் அனுப்பியிருந்த புகார் மிகக் குறுகியவிதத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூற விரும்புகிறேன். தலைமைத் தேர்தல்ஆணையம் இந்த அம்சத்தை, “அதிகாரப்பூர்வ ஊடகம் துஷ்பிர யோகம்” செய்யப்பட்டிருக்கிறது என்கிற விதத்தில் தன்னைச் சுருக்கிக் கொண்டிருக்கிறது. அப்படியானால், பிரதமரின் உரையைத் தாங்கள் கருதியிருப்பதைப்போன்ற நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி களின் தலைவர்களின் உரைகளையும் அறிக்கைகளையும் ஒளிபரப்பிட/ஒலிபரப்பிட நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகங்களுக்கு கட்டளை பிறப்பிக்கப் பட வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.இதில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவெனில் பிரதமர் ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் மக்கள் மத்தியில்தனக்குச் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாட்டில் நம் விஞ்ஞானிகள் எய்திய சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதேயாகும். தேர்தல் ஆதாயங் களுக்காக இவ்வாறு பிரதமர் தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.


தெளிவான துஷ்பிரயோகம்


பிரதமரின் இந்த உரையைத் தொடர்ந்து, பிரதமர் தான் நிலத்திலும் வானிலும் மட்டுமல்ல, வானமண்டலத்தி லும் சௌகிதார்தான் என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் முந்தைய அரசாங்கங்களிடம் இல்லாத தைரியம் இந்த அரசாங் கத்திற்கு உண்டு என்பதைப்போல பிரதமரும் பாஜகவின் இதர தலைவர்களும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவைஅனைத்தும் தேர்தல் ஆதாயங் களுக்காக பிரதமர் தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று கூறுவதைத்தவிர வேறெவ்வாறு கூறமுடியும்?பொதுவாக விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் சாதனைகளை டிஆர்டிஓ இயக்குநர் போன்று மூத்த அதிகாரிகள்தான் அறிவிப்பார்கள். ஆனால் அதற்குப் பதிலாக அதனைப் பிரதமர் அறிவிப்பது என்பது நிச்சயமாக தேர்தல் நடத்தை விதியின் ஷரத்துக்களை மீறிய செயலேயாகும். இவ்வாறு பிரதமர் தன் சொந்த ஆதாயத்திற்காக பிரதமர் என்னும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்பது தெளிவான ஒன்றாகும்.இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரை நான் கேட்டுக் கொள்கிறேன். மக்களவைக்குப் போட்டியிடும் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு பொதுவான நபராக இருந்து நாட்டில் தேர்தலை நியாயமாகவும் நேர்மை யாகவும் நடத்திட தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அரசமைப்புச் சட்டத் தின் 324ஆவது பிரிவின்கீழ் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியமான நலன்களின் அடிப்படையில், இப்பிரச்சனைமீது தலைமைத் தேர்தல் ஆணையர், மிகவும் ஆழமான முறையில் பரிசீலனை செய்திடுவார் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

;