tamilnadu

img

விதியைக் காட்டித் தப்பிக்கும் மோடி அரசு? ரபேல் கொள்முதல் ஒப்பந்தம் தணிக்கை செய்யப்படவில்லை!

புதுதில்லி:
பாதுகாப்புத் துறை தொடர் பான கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான தனது செயல்பாட்டு தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமை தணிக்கையாளர், மத்திய அரசிடம் சமர்ப் பித்து 8 மாதங்கள் ஆகியும் அதுநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை.

இதுகுறித்து தொடர்ந்து கேள்வி கள் எழுப்பப்பட்டு வந்தன.இதற்கு அண்மையில் டுவிட்டரில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘பாதுகாப்புத் துறை தொடர்பான ‘சிஏஜிஅறிக்கை எண்: 20, 2019’, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதாக இருந்தது;ஆனால், கொரோனா ஊரடங்குகாரணமாக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெறாத சூழலில் இது எதிர்வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.இந்நிலையில்தான், சிஏஜி அறிக்கையில், ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததுடன், வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அவ்வாறிருக்கையில், ரபேல் கொள்முதல் தொடர்பான எந்த தகவலையும், மத்திய தலைமைகணக்குத் தணிக்கை அலுவலருக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. 

அதாவது, பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்துடனான இந்த கொள்முதலைப் பொறுத்தவரை, ஒப்பந்தம் முடிந்த 3 ஆண்டுகள் கழித்தப் பின்னரே எந்த விபரங்களும் வெளியிடப்படும் என்று விதிமுறைகள் உள்ளதால், அதுபற்றிய ஆவணங்களை தர முடியாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தலைமை தணிக்கையாளரிடம் கூறி விட்டதாக தெரிகிறது. இதனால், 2019 டிசம்பரில் மத்திய அரசிடம் சிஏஜி சமர்ப்பித்த தணிக்கை அறிக்கையில், 12 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டுள்ளன; ரபேல் கொள்முதல் ஒப்பந்தம் தணிக்கை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவ்விஷயத்தில், ஒப்பந்த விதிமுறையை மோடி அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.

;