tamilnadu

img

நித்தியைக் கண்டுபிடிக்க முடியாத மோடி அரசு.... எங்கே என்றே தெரியவில்லையாம்

புதுதில்லி:
கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்தியானந்தா மீது குழந்தைகள் கடத்தல், மோசடி மற்றும் பாலியல் வல்லுறவு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதில், 4 குழந்தை களை மீட்டு, 2 பெண் சீடர்களைக் கைது செய்யமுடிந்தாலும், நித்தி யானந்தாவை மட்டும் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. அவரை உடனடியாக கைது செய்யுமாறு கர்நாடக நீதிமன்றமும் உத்தரவுகளைப் பிறப்பித்தும் மோடி அரசால் முடியவில்லை.

நித்தியானந்தாவோ, அவ்வப்போது வீடியோ-க்களை வெளியிட்டு, முடிந்தால் கைது செய்யுங்கள் என்று தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார்.இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், “நித்தியானந்தாவை கண்டுபிடிக்கும் முயற்சி யில் நாங்கள் பல நாடுகளின் தூதரகங்களையும், அரசு களையும் நாடியுள்ளோம். நித்யானந்தா குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு இருக்கிறோம். ஆனால்நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்க வில்லை. இது தொடர்பாக ஈகுவேடார் நாட்டை தொடர்பு கொண்டபோது அவர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவே தகவல் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.

;