tamilnadu

img

மோடியை பிளவுவாதி என்ற கட்டுரையாளரின் குடியுரிமை ரத்து?

புதுதில்லி:
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆதிஷ் தசீருக்கு வழங்கப்பட்டிருந்த, வெளிநாட்டுக் குடியுரிமையை (Overseas Citizenship of India) ரத்துசெய்யக் கூடாது என்று உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்எழுதியுள்ளனர்.இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த எழுத்தாளர் ஆதிஷ் தசீர், ஒரு நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர், கடந்த மே மாதம் ‘டைம்’ பத்திரிக்கையில் பிரதமர் மோடியை ‘பிளவுவாதத் தலைவர்’ என்று குறிப்பிட்டு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “ஆதிஷ் தசீரின் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், அந்த தகவலை தசீர் மறைத்துவிட்டார்” என்றும் கூறி, ஆதிஷ் தசீருக்குவழங்கப்பட்டிருந்த வெளிநாட்டுக் குடியுரிமையை ரத்து செய்ய, மத்திய அரசுமுடிவு செய்துள்ளது. ஆனால், “இந்திய அரசாங்கத்தை விமர்சித்த காரணத்திற்காகவே, தசீர்மிகவும் தனிப்பட்ட முறையில் இலக்குவைக்கப்பட்டுள்ளார்” என்று 250-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். தசீரின் தந்தை சல்மான் தசீர் ஒரு பாகிஸ்தான் நாட்டவராக இருந்தபோதிலும் அவரது தாயார் தவ்லீன் சிங்,இந்தியர் ஆவார். ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் மூத்த பத்திரிகையாளர்- கட்டுரையாளர். தந்தை சல்மான்தசீரும்கூட, பாகிஸ்தான் அரசை எதிர்த்துப் போராடினார் என்பதற்காக அந்நாட்டில் படுகொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;