tamilnadu

img

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாடல் அழகி... 

ஜெய்ப்பூர் 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா ஷியோரன். மடல் அழகியான இவர் தில்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரம் படித்து பின்னர் இந்தூர் ஐஐஎம்-மில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

இவருடைய நோக்கம் கல்லூரி முடித்தவுடன் மாடலிங்கில் கலந்துகொண்டு மிஸ் இந்தியாவாக வர வேண்டும் என்பது தான். இதற்காக கடந்த 2015-ஆம் அண்டு நடைபெற்ற தில்லி பிரஷ் ஃபேஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.  2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில், பட்டம் வெல்லவில்லை என்றாலும் இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தினார்.  

மாடலிங் துறையில் ஒருபக்கம் ஆசை என்றாலும், ஐஸ்வர்யாவின் முழு எண்ணமும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி உயரஅதிகாரியாக ஆக வேண்டும் என்பதே. இந்த எண்ணத்தை நிறைவேற்ற கடந்த பத்து மாதங்களாக பயிற்சி வகுப்புக்குச் செல்லாமல் சொந்தமாக வீட்டிலேயே படித்தார்.  

இந்நிலையில் நடப்பாண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் ஐஸ்வர்யா ஷியோரன் 93 வது தரவிரசை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நாட்டில் பல்வேறு துறைகளில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஆனால் முதன்முறையாக மாடலிங் துறையில் உள்ள ஒரு பெண் தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறையாகும்.  

;