tamilnadu

img

ஜான்சியிலிருந்து 500 கி..மீ நடந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

பல்ராம்பூர்:
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால்  உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வேலையில்லாமல் வறுமையில் வாடிய ஏழு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரான  பல்ராம்பூர் மாவட்டம் பச்பேத்வா-வை அடுத்துள்ள  காதரு கிராமத்திற்கு சுமார் 500 கி.மீ. நடந்தே சென்றுள்ளனர். தங்களது சொந்த கிராமத்தை அடைய 500 கிலோ மீட்டர்  நடந்தே சென்றுள்ளனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் ஜான்சியில் 20 நாட்கள் வேலை இல்லாமல் இருந்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாக தொழிலாளர்கள் கூறினர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவரான சிவ்பிரசாத் கூறுகையில் எனது 80 வயது தாய் உடல் நலம் குன்றியிருப்பதால் எப்படியாவது காதரு கிராமத்திற்குச் சென்றுவிட வேண்டுமென விரும்பினேன். எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை. அதை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை. கிராமத்தைச் சென்றடைவதே எங்கள் நோக்கமாக இருந்தது. நடந்துவரும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம். ஆனால் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இரவும் பகலும் நடந்த நாங்கள் நான்கு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை மட்டுமே தூங்குவோம். வந்த வழிகளில் உள்ளூர் மக்களும், காவல்துறையினரும் எங்களுக்கு உணவளித்தனர். நடந்து செல்லும் போது சோர்வடையும் போது  மரத்தின் அடியில் ஓய்வெடுப்போம். பத்து அல்லது 20 நிமிடங்கள் ஓய்வெடுத்த பிறகு,  மீண்டும் நாங்கள் தொடங்கினோம். என்றார்.

பிரபு தயாள் என்பவர் கூறுகையில், ஏழு நாட்கள் நாங்கள் நடந்தோம். நடந்துவரும் போது எங்களைக் கடந்து செல்லும் வாகனங்கள் எங்களை ஏற்றிச் செல்லும் என நம்பினோம். ஆனால் அந்த அதிர்ஷ்டம் எதுவும் கிடைக்கவில்லை.  ஒரு வாகனத்திற்குப் பின் நான்  ஓடியபோது எனது மொபைல் எங்கோ விழுந்து விட்டது என கண்ணீர் மல்கக் கூறினார். இதற்கிடையில் காவல்துறையில் சிக்கிக்கொண்ட ஏழு தொழிலாளர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் தேவ் ரஞ்சன் வர்மா கூறினார்.
 

;