tamilnadu

ஜன. 8 வேலைநிறுத்தத்தில் களமிறங்குவோம் விவசாய, விவசாயத் தொழிலாளர் சங்கங்கள்; மாணவர், வாலிபர், மாதர், தலித், பழங்குடியினர் சங்கங்கள் முடிவு

புதுதில்லி, ஜன.5- 2020 ஜனவரி 8 அன்று அனைத்து பொதுத்துறை சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில், 20 கோடிக்கும் மேலான உறுப்பினர்களை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட விவ சாய, விவசாயத் தொழிலாளர், மாண வர், வாலிபர், மாதர், தலித், பழங்குடி யினர் மற்றும் சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இது தொடர்பாக இச்சங்கங்களை உள்ளடக்கிய ஜேஇஜேஏஏ எனப்படும் ‘ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன்’ (JEJAA-Jan Ekta Jan Adhikar Andolan) என்னும் கூட்டமைப்பின் சார்பில் ஹன்னன் முல்லா (அகில இந்திய விவ சாயிகள் சங்கம்), அமர்ஜித் கவுர் (ஏஐடியுசி), கே.ஹேமலதா (சிஐடியு), அதுல் குமார் அஞ்சான் (விவசாயிகள் சங்கம்), மரியம் தாவ்லே (அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), ஆனி  ராஜா (இந்திய தேசிய மாதர் சம்மேள னம்), மற்றும் கவிதா கிருஷ்ணன், திரு மலை, விக்ரம் சிங், கௌதம் மோடி, கே. மதுரேஷ் குமார், ரோமா மாலிக், பி.  கிருஷ்ணபிரசாத், ராவீஜ் மிம்ரி, சத்ய வான், மனோஜ் பட்டாச்சார்யா, டாக்டர் சுனிலம், அனில் சௌத்ரி, நிகில் தே முதலானவர்கள் கையொப்பமிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: 2020 ஜனவரி 8 வேலைநிறுத்தம், நாட்டு மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம்,  தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிய வற்றிற்கு எதிராக தீரத்துடன் நடத்திக் கொண்டிருக்கும் கிளர்ச்சிப் போராட்டத் தில் மேலும் ஒரு முத்திரைச் சின்னமாக அமைந்திடும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாக இருக்கக்கூடிய பாஜக அர சாங்கம் கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்கள் விரோதமான, அர சமைப்புச் சட்டம் பொறித்துள்ள விழு மியங்களுக்கு எதிரான ஒன்றாகும் என்றும்; இது நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளுக்கு கடும் சேத த்தை ஏற்படுத்தும் என்றும் ஜேஇஜேஏஏ கருதுகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறது. இதனுடன் இணைந்த தேசியக் குடிமக்கள் பதிவேடு/தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவை நாட்டின் பல லட்சக் கணக்கான மக்க ளின் வாழ்வைச் சூறையாடிவிடும். ஜேஇஜேஏஏ-இல் அங்கம் வகிக்கும் சங்கங்கள் அனைத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதி வேடு ஆகியவற்றிற்கு எதிராக நடை பெற்றுவரும் வீரஞ்செறிந்த போராட்டங் களில் முன்னணியில் நிற்கின்றன. நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், மதச்சார்பின்மை விழுமியங்களையும் பாதுகாத்திட, இப்போராட்டத்திற்குத் தலைமைதாங்கி நடத்திக் கொண்டி ருக்கிற மாணவர்களுக்கும், இளை ஞர்கள் - இளம்பெண்களுக்கும், வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் வேலை வழங்கு, விலைவாசியைக் கட்டுப்படுத்து, அனை வருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்கு, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு, ரயில்வே, பாதுகாப்பு உட்பட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே, அனை வருக்குமான பொதுக் கல்வி மற்றும் சுகாதார நலத் திட்டங்களைக் கொண்டுவா, தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக, முதலாளிகள் ஆத ரவு சட்டங்களாக மாற்றாதே, விவ சாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கொடு, அர சமைப்புச்சட்டத்திற்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்  உட்பட மக்களின் அடிப் படை உரிமைகளுக்காக, பத்து மத்திய தொழிற்சங்கங்களும், சுயேச்சையான சம்மேளனங்களும் அறைகூவல் விடுத்துள்ள 2020 ஜன வரி 8 பொது வேலைநிறுத்தத்தில் ஜேஇஜேஏஏ-யும் தன்னை இணைத்துக்கொள்கிறது. ஜனவரி 8 வேலை நிறுத்த த்தை மாபெரும் வகையில்  வெற்றி பெறச்செய்திட மக்கள் அனை வரும் களமிறங்குவோம் என ஜேஇ ஜேஏஏ அறைகூவி அழைக்கிறது. (ந.நி.)

;