tamilnadu

img

தப்ப விடப்படும் கதுவா பாலியல் குற்றவாளிகள்?

ஜம்மு:
கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கில், தீர்ப்பு வெளியாகி 4 மாதங்களாகி விட்ட நிலையில், காஷ்மீரின் புதியஅரசியல் சூழலைப் பயன்படுத்தி குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான சூழ்ச்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம்கதுவா மாவட்டத்திலுள்ள ரசானா பகுதியில் 8 வயது சிறுமியை, இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், கோயிலுக்குள் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. பின் னர் அந்தச் சிறுமியை, கொடூரமாகப் படுகொலையும் செய்து, காட்டுப் பகுதியில்வீசியது.

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியஇந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள்காவல்துறை அதிகாரி தீபக் ஹாஜூரியா,கோயில் பொறுப்பாளர் சஞ்சய் ராம், அவரது மகன் விஷால் ஜங்கோத்ரா, மருமகன் (சிறார் குற்றவாளி), கிராமவாசி பர்வேஷ் குமார் மற்றும் 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 8 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் 8-ஆவது நபர் சிறுவன் என்பதால் அவரை விடுவித்த பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான் கோட் மாவட்டநீதிமன்றம், தீபக் ஹாஜூரியா, சஞ்சய் ராம், பர்வேஷ் குமார் ஆகிய 3 பேருக்குகடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆயுள் தண்டனையும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தது. தடயங்களை அழித்த குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகள் ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர்வர்மா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள்சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம்அபராதம் வழங்கப்பட்டது. சஞ்சய் ராமின் மகன் விஷால் ஜங் கோத்ரா மட்டும் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், தீர்ப்பு வந்து 4 மாதங்களாகி விட்ட நிலையில், கதுவா வழக்கில்பொய்சாட்சி கூறவைத்த குற்றச்சாட்டில், சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் 6 பேர் மீது, வழக்கு பதிவு செய்யுமாறு, ஜம்மு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.கதுவா வழக்கில் விஷால் ஜங் கோத்ராவுக்கு எதிராக பொய்சாட்சி கூறுமாறு, எஸ்ஐடி அதிகாரிகள் தங்களை மிரட்டினார்கள் என்று, இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த சச்சின் சர்மா, நீரஜ்சர்மா மற்றும் சாஹில் சர்மா ஆகியோர்ஜம்மு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தனர். அதனை ஏற்றுக் கொண்டே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.கே. ஜல்லா உட்பட எஸ்ஐடிஅதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவுசெய்யுமாறு ஜம்மு நீதித்துறை மாஜிஸ்திரேட் பிரேம் சாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதாவது சஞ்சய் ராம் மகன் விஷால்ஜங்கோத்ரா, கதுவா வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் ஏற்கெனவே மேல்முறையீடு செய்துள்ளனர். அதன்மீது விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த மேல்முறையீட்டை திசைத் திருப்பும் வகையிலும், எதிர்க்கட்சிகள் முடக்கி வைக்கப்பட் டுள்ள காஷ்மீரின் தற்போதைய புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி- ஒட்டுமொத்தமாகவே இந்த வழக்கை சிதறடிக்கும் வகையிலும் சாட்சிகளை மிரட்டியதாக எஸ்ஐடி அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சூழ்ச்சிகள் இருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

;