சென்னை, நவ.9- அயோத்தி பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தீர்ப்பை மதித்து அமைதி காத்து மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்(திமுக): நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டுள்ளது. அதை ஏற்றுக் கொண்டு அனைத்து தரப்பினரும் சமமான மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார் கள் என்று நம்புகிறேன்.
அமைதி காப்போம்
இரா.முத்தரசன்(சிபிஐ): இந்த தீர்ப்பை அனை வரும் மதிக்க வேண்டும். எந்தவொரு தரப்பும் வெற்றி யாகவோ, தோல்வியாகவோ கருதாமல் நீதி பரி பாலன முறையின் உச்ச அமைப்பு வழங்கிய தீர்ப்பில் மதச்சார்பின்மை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு என்று கூறியிருப்பதை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்க சூழலை பரா மரித்து வருவது குடிமக்களின் கடமைப் பொறுப்பு என்பதை உணர்ந்து, அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்.
மதங்களை கடந்து....
வைகோ(மதிமுக): சிறுபான்மை மக்களுக்கு அரணாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதை கடந்தகால வரலாறு காட்டுகிறது. மதங்களைக் கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது. எனவே மத நல்லி ணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது.
இணைந்தே வாழுவோம்!
கே.எம். காதர் மொகிதீன் (முஸ்லிம் லீக்): இந்திய ஜனநாயகத்தில் சட்டப் பிரச்சனைக்கு இறுதி முடிவு அளிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கே வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது இறுதித் தீர்ப்பாக அமைகிறது. அதனை ஏற்று எல்லோரும் உடன்பட்டு நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பது இன்றையக் காலத்தின் கட்டாயத் தேவை என்றே கருதுகிறோம். இந்திய மக்கள் அனை வரும் இதயப் பூர்வமாக இணைந்து வாழும் சமூக சுமூகத்தை உருவாக்கப் பாடுபடுவதே எல்லோரு டைய தேசியக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
எழும் கேள்விகள்?
தொல்.திருமாவளவன்(விசிக): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாக தெரிய வில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப் பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் முயற்சி யாக இல்லாது சமரச முயற்சியாகவே இருக்கிறது. ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக் கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவக் கூடாது. இஸ்லாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்க வில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங் கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுகிறது. சாஸ்தி ரங்கள் அடிப்படையில் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல் தலை யீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
முரண்பாடுகளின் மொத்த வடிவம்
எம்.எச்.ஜவாஹிருல்லா(தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்): 450 ஆண்டு காலம் முஸ்லிம்க ளின் வழிபாட்டுத் தலமாக இருந்த பாபர் பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மதச்சார்பின்மையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்துள் ளது. இந்தத் தீர்ப்பு முரண்பாடுகளின் மொத்த வடிவ மாகவும், தவறான முன்னுதாரணமாகவும் அமைந் துள்ளது.
இல.கணேசன் (பாஜக): இது யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாத தீர்ப்பு.