tamilnadu

img

ஜேஎன்யு வன்முறைப் பேர்வழி சிவசேனா வேட்பாளர் ஆனார்!

புதுதில்லி:
தில்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவரான உமர் காலித், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புதுதில்லியில் கொலை முயற்சிக்கு உள்ளானார். அவரை நவீன் தலால் மற்றும் தர்வேஷ் ஷாப்பூர் ஆகியோர் துப்பாக்கியால் சுட முயன்றனர்.எனினும், துப்பாக்கியில் குண்டு சிக்கிக் கொண்டு ஜாம் ஆனதால், காலித் அந்த சம்பவத்தில் காயமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவத்திற்கு பிறகு தலால் மற்றும் ஷாப்பூர்ஆகியோரும் தலைமறை வாகினர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நவீன் தலால், அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், சிவசேனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.“நவீன் தலால் பசுப் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார். தேச விரோத கோஷங்களை எழுப்புபவர்களுக்கு எதிராக பேசுகிறார். எனவே,நாங்கள் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார், சிவசேனாவின் ஹரியானா (தெற்கு) பகுதி தலைவர் விக்ரம் யாதவ்.

;