tamilnadu

img

தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஜேஎன்யு, அலிகார் பல்கலை.கள்.. போராட்டத்தில் மட்டுமல்ல, படிப்பிலும் முன்னணி

புதுதில்லி:
நாட்டில், மத அடிப்படையிலான பிளவை ஏற்படுத்த முயலும், மத்திய பாஜக அரசை எதிர்த்து இந்தியா முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குஎதிராக, தில்லி ஜாமியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழக மாணவர்களும், விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக, தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்களும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், உரிமைப் போராட்டங்களை நடத்துவதில் மட்டுமல்ல,படிப்பிலும் தாங்கள் முன்னணியில் தான் இருக்கிறோம் என்பதை ஜேஎன்யு, அலிகார், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நிரூபித்துள் ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலின் மூலம் இது உறுதியாகியுள்ளது.கடந்த 2016 முதல் தில்லி ஜேஎன்யுமாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 2017-இல் 61.53 சதவிகிதமாக இருந்த பல்கலைக்கழகத்தின் தரவரிசை, தற்போது 68.8 சதவிகிதமாக அதிகரித்து பட்டியலில் 7வது இடத்தை பெற்றுள்ளது.அதேபோல, அலிகார் பல்கலைக்கழகம் 11-ஆவது இடத்தையும், ஜாமியா பல்கலைக்கழகம் 12-ஆவதுஇடத்தையும் பிடித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 14-வதுஇடத்தில் இடம்பெற்றுள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.

;