tamilnadu

img

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தரானார் நஜ்மா அக்தர்

கடந்த 99 வருட ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல் பெண் துணைவேந்தராக நஜ்மா அக்தர் நியமிக்கப்பட்டார்.


தேசிய கல்வி திட்டமிடுதல் மற்றும் நிர்வாகம் நிறுவனத்தின்(National Institute of Educational Planning and Administration) பேராசிரியர் மற்றும் துறை தலைவரான நஜ்மா அக்தர் தில்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா(Jamia Millia Islamia) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் துவங்கி கடந்த 99 ஆண்டுகளில் ஒரு பெண் துணைவேந்தராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.


நஜ்மா அக்தர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்படுவார். மேலும், அவரின் நியமனத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்த முடிவு வரலாற்றில் முத்திரை பதிக்கக்கூடியது. இது ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் பெருமைப்படக்கூடிய நடவடிக்கை” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;