tamilnadu

img

மண்ணெண்ணெய் மானியத்தை நிறுத்தும் திட்டம் உள்ளதா? பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுதில்லி, மார்ச் 4 –  ஏழை, எளிய மக்கள் பயன்படுத் தும் மண்ணெண் ணெய்கான மானி யத்தை நிறுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு மத் திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.  இதுதொடர்பாக, மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  பேசுகையில், நாடு முழுவதிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழுள்ள கடை களின் மூலம் வழங்கப்படும் மண் ணெண்ணெய்க்கான மானியத்தை நிறுத்தும் திட்டம் ஏதேனும் அரசிடம் உள்ளதா? பொதுவிநியோகத் திட் டத்தின் கீழுள்ள கடைகளை, தனியா ருக்கு கொடுக்கும் திட்டம் ஏதாவது அர சிடம் உள்ளதா? அதன் விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் தன்வே ராவ் சாகிப் டடராவ் அளித்த பதிலில்,  பெட்ரோலி யப் பொருட்களின் விலைகள், சம்பந் தப்பட்ட பொருட்களின் சர்வதேச சந்தை விலையோடு தொடர்புடை யவை.  எனினும்,  அரசாங்கம்,  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் மண்ணெண்ணெய்க்கான சில் லறை விற்பனை விலையை தொடர்ந்து  ஒழுங்குபடுத்துகிறது. நுகர்வோரும் மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுகிறார்கள். தற்போது இந்தத் துறையை தனியாருக்கு கொடுக்கும் எந்தத் திட்டமும் அரசின் பரிசீலனை யில் இல்லை என தெரிவித்தார்.

;