tamilnadu

img

இன்சூரன்ஸ் துறையும்  கொரோனாவால் பாதிப்பு...

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதையொட்டிய பொதுமுடக்கம், வேலையின்மை, மக்களின் வருமான இழப்பு காரணமாக, இன்சூரன்ஸ் துறையும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. கடந்த 2020 ஏப்ரல் - ஜூன் காலாண்டில், முதல் ஆண்டு பிரீமியம் வசூல் 18.6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 49 ஆயிரத்து 335 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளதாக ‘கேர் ரேட்டிங்ஸ்’ கணிப்புகள் கூறுகின்றன.கடந்த 2019-ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், 60 ஆயிரத்து 637 கோடி ரூபாயாக முதலாண்டு பிரீமியம் வசூல் இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 19.2 சதவிகிதமும், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யின் பிரீமியம் வசூல் 18.5 சதவிகிதமும் சரிந்துள்ளது.

பிரீமியம் வருவாயும் ஏப்ரல் மாதத்தில் 32.6  சதவிகிதம், ஏப்ரல் மாதத்தில் 27.9 சதவிகிதம் என வீழ்ச்சி கண்டுள்ளது. ஜூன் மாதத்தில் சற்று ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது என்றாலும், ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் துறை வளர்ச்சியும் 12.9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 8.8 டிரில்லியன் ரூபாயாக பிரீமியம் வருவாய் குறைந்துள்ளது.  இதுவே முந்தைய 2019-ஆம் ஆண்டில் பிரீமியம் வருவாய் 10 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. மேலும் 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 17.6 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது.

;